
இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்க எந்த உரிமையும் கிடையாது என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.
எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், துப்பாக்கியால் சுடுவதும், அவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து வருகிறது இலங்கை அரசு.
இதனால், தமிழக மீனவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இலங்கை அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகை குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, வலைகளையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி வருகிறது.
இலங்கையின் இந்த போக்கைக் கண்டித்தும், இந்த பிரச்சனையை தீர்க்கக் கோரியும், தமிழக மீனவர்கள் பல்வேற போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை அரசின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டக் கூடாது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் மீன் பிடிக்க வேண்டும் என்றும் நமல் ராஜபக்சே எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.