97 மீனவர்கள் சுட்டுக்கொலை - ராணுவத்தினர் அட்டூழியம்...

 
Published : Jul 15, 2017, 02:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
97 மீனவர்கள் சுட்டுக்கொலை - ராணுவத்தினர் அட்டூழியம்...

சுருக்கம்

97 fishermen killed by cameroon forces

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள பகாசி என்ற தீபகற்ப பகுதியை கடந்த 2008-ம் ஆண்டு கேமரூன் நாட்டிற்கு நைஜீரியா விட்டுக்கொடுத்தது.

 இந்த தீபகற்பத்தில் நைஜீரியா நாட்டினர் சுதந்திரமாக மீன் பிடித்து வந்தனர்.

ஆனால், தற்போது கேமரூன் நாட்டின் கட்டுப்பாட்டில் பகாசி  சென்ற நாள் முதல் மீன் பிடிப்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கேமரூன் விதித்துள்ளது.

கேமரூன் நாட்டின் இந்த விதிகளை மீறி கட்டணம் செலுத்தாமல் நைஜீரியா மீனவர்கள் மீன் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் கட்டணம் செலுத்தாமல் மீன் பிடிக்க சென்ற 97 மீனவர்களை கேமரூன் ராணுவம் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளது.

இத்தாக்குதல் தொடர்பாக கேரூன் அரசு இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடாத நிலையில் 97 மீனவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தாய்-கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை உடைப்பு.. இந்தியா கடும் கண்டனம்..!
உலகம் அழியப்போகுது.. கானா சாமியார் கட்டும் நோவா பேழையில் தஞ்சம் புகும் மக்கள்!