rajapaksa : mahinda rajapaksa : sri lanka voilence : இலங்கையில் நடந்துவரும் ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்தி போராட்டத்தில் கொல்லுபித்தயா, கல்லே நகரில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
இலங்கையில் நடந்துவரும் ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்தி போராட்டத்தில் கொல்லுபித்தயா, கல்லே நகரில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
பொருளாதார நெருக்கடி
இலங்கை சுதந்திரம் அடைந்தபின் முதல்முறையாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இலங்கை அரசிடம் கைவசம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவிட்டதால், எந்த பொருட்களையும் வெளிநாட்டிலிருந்து வாங்க இயலாத நிலையில் இருக்கிறது. இதனால் இருக்கின்றன பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும்வகையில் உயர்ந்துவிட்டதால், மக்கள் சாலையில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.
இலங்கை அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவிட்டதால், வெளிநாட்டு கடன்களையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை, வெளிநாடுகளில் இருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது.
ராஜினாமா
மக்களின் வாழ்வாதாரம் நாசமாகிவட்டால், அரசுக்கு எதிராக கடந்த மார்ச் மாதத்திலிருந்து மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் பதவி விலகக் கோரி மக்கள் நடத்தி போராட்டத்தினர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்.
வன்முறை
பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்வதற்கு முன், மக்களின் போராட்டம் தீவிரமாக இருந்தது. இலங்கையில் கடந்த 2 மாதங்களாக மக்கள் அமைதி வழியில் போராடி வந்தநிலையில், கடந்த 9ம் தேதி நடந்த வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் கல்லே நகரின் பேஸ்கிரீன் பகுதி, கொல்லுபித்தயா நகரில் மக்கள் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதால் பெரும் கலவரம் மூண்டது.
இதில் எம்.பி. ஒருவரும் கொல்லப்பட்டார். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறைச் சம்பவதத்தைத் தொடர்ந்துதான் மகிந்த ராஜபக்ச பதவிவிலகினார்.இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் எம்.பி.க்கள் புதிதாக பிரதமர் பதவி ஏற்ற ரணில் விக்ரமசிங்கேயிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விசாரணை
இதையடுத்து, சிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஏற்கெனவே மகிந்தா ராஜபக்ச மகன் நமல் ராஜபக்சேயிடம் போலீஸார் விசாரணையை நடத்திய நிலையில் நேற்று மாலை மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மகிந்த ராஜபக்சவிடம் ஏற்குறைய 3 மணி நேரம் நடத்தப்பட்டு, பின்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன