மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திவாவோன் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று செனகல். இந்த நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகர் உள்ளது . அங்குள்ள ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிறிது நேரத்தில் மளமளவென அடுத்தடுத்து இடங்களில் பரவியது. இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு ததகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அங்கிருந்த 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், சில கழந்தைகள் தீக்காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அந்த நாட்டின் அதிபர் மேக்கி சால் வேதனையுடன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதேபோல பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.