அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழர்கள் ஆதிக்கம் - பிரதிநிதிகள் சபைக்கு சென்னை ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு

First Published Nov 10, 2016, 4:23 AM IST
Highlights


அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் இல்லிநாய்ஸ் மாநிலத்தில் போட்டியிட்ட அமெரிக்க இந்தியர் ராஜா கிருஷ்ணமூர்த்தி பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார்.

 குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் எம்ஹர்ஸ் நகர முன்னாள் மேயருமான பீட்டர் டிசியானியை தோற்கடித்தார் ராஜா கிருஷ்ணமூர்த்தி. 43 வயதான ராஜா கிருஷ்ணமூர்த்தி, சிகாக்கோ பகுதியின் சார்பாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளார்.

புதுடெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியில் பெற்றோர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெறும் 2-வது தமிழர் இவர் ஆவார்.

கடந்த 1973-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி புதுடெல்லியில் ராஜா கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். பெற்றோர்கள் நியூயார்க்கின் பப்பலோ(Buffalo) நகருக்கு குடியேறியவுடன் அங்கு வளர்ந்தார்.

அமெரிக்காவின் சிக்காகோவில், உள்ள சிவநந்தன் ஆய்வகம் மற்றும் மருத்துவமனையில்  பொறுப்பாளராக கிருஷ்ண மூர்த்தி பணியாற்றி வருகிறார். அதிபர்ஒபாமாவால் இந்த தேர்தலில், ராஜா கிருஷ்ணமூர்த்தி முன்மொழியப்பெற்றார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பீட்டர் டிசியானி 51 ஆயிரத்து 149 வாக்குகள் பெற்ற நிலையில், ராஜா கிருஷ்ணமூர்த்தி 81 ஆயிரத்து 263 வாக்குகள் பெற்று பெற்று பெற்றார்.

பிரதிநிதிகள் அவைக்கு தேர்வாகு 2-வது இந்து அமெரிக்க இந்தியர் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், துல்சி கப்பார்டு ஹவாய்மாநிலத்தில் இருந்து தேர்வாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற 2-வது இந்தியர் ராஜா கிருஷ்ணமூர்த்தி. இதற்கு முன் கடந்த 1950-ல்தலிப் சிங் சவுந்த் மட்டுமே இதுபோல் வெற்றி பெற்று இருந்தார்.

இதற்கு முன், பாபி ஜின்டால், டாக்டர் அமி பேரா ஆகியோர் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் அமெரிக்காவில் பிறந்தவர்கள். இந்தியாவில் பிறந்தவர்கள் இல்லை. இதில் அமி பேரா 3-வது முறையாக கலிபோர்னியாவில் இருந்து தேர்வாகும் நிலையில் இருக்கிறார்.

 கடந்த 2004ம் ஆண்டில் அதிபர் ஒபாமாவின் செனட் பிரசாரத்துக்கு அதிபருக்கு மூத்த ஆலோசகராக ராஜா கிருஷ்ணமூர்த்தி பணியாற்றினார். 2008-ல் ஓபமாவுக்குதனிப்பட்ட ஆலோசகராகவும் இருந்தார்.

2007-2009ம் ஆண்டு இல்லிநாய்ஸ் மாநிலத்தின் துணை நிதியமைச்சராகவும் ராஜா கிருஷ்ணமூர்த்தி இருந்தார்.

click me!