
கலிபோர்னியா அரசு தலைமை வழக்கறிஞராக பணிபுரிந்துவரும் இந்திய அமெரிக்கர் கமலா ஹாரிஸ் முதல்முறையாக செனட்(மேல்சபை) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் செனட் உறுப்பினராக இந்தியர் ஒருவர், அதிலும் குறிப்பாக பெண் ஒருவர், சென்னையில் பிறந்தவர் தேர்வாவது இதுதான் முதல் முறையாகும்.
51வயதாகும் கமலா ஹாரிஸ், குடியரசுக்கட்சியைச் சேர்ந்த லோரட்டா சான்செஸை தோற்கடித்து இந்த பெருமையைப் பெற்றார். அமெரிக்க செனட் அவைக்கு தேர்வு செய்யப்படும் 5-வது கருப்பினர் கமலாஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஒபாமா, 5-வது கருப்பர் ஆவார். கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின், மேல்சபையான செனட் அவைக்கு தேர்வாகும் முதல் கருப்பினப் பெண் கமலா ஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலா ஹாரிஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளர் லோரெட்டா சான்செஸை விட34.8 சதவீத புள்ளிகள் அதாவகு, 19 லட்சத்து 4 ஆயிரத்து 714 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கலிபோர்னியா மாநிலம், ஆக்லாந்தில் பிறந்தவர் கமலா ஹாரிஸ். இவரின் தாய் சியாமலா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர். மருத்துவப் படிப்புக்காக அமெரிக்கா வந்த சியாமலா கோபாலன் இங்கு ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்ட் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில்(கீழ்சபை) இந்தியர்கள் பலர் இடம்பெற்று இருந்தபோதிலும், வலிமை மிக்க, செனட்டர் சபையில் இதுவரை ஒரு இந்தியர் கூட இருந்தது இல்லை. அந்த குறையை கமலா ஹாரிஸ் நீக்கி விட்டார்.