இலங்கையில் போராட்டக்காரர்கள் இன்று அதிபர் கோத்தபய ராஜக்பக்சேவின் இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்ததையடுத்து, அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். நேற்று இரவே அவரது இல்லத்தில் இருந்து அவர் தப்பி ஓடியதாக செய்திகள் கூறுகின்றன.
இலங்கையில் போராட்டக்காரர்கள் இன்று அதிபர் கோத்தபய ராஜக்பக்சேவின் இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்ததையடுத்து, அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
போரட்டக்காரர்கள் யாரும் கோத்தபய ராஜபக்சே இல்லத்துக்குள் நுழையாத வகையில் தடுப்புகள் அமைத்து, பலத்த பாதுகாப்பு போடப்பட்ட போதிலும் போராட்டக்காரர்கள் அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனால், கூட்டத்தினரைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.
எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.. கோத்தபய ராஜபக்சேவுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!
இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பாதுகாப்புடன் பாதுகாவலர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.அதேநேரம் நேற்று இரவே ராணுவ தலைமையகத்துக்கு ராஜபக்சே சென்றுவிட்டதாகவு்ம் தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கை பொருளாதாரம் மிக அபாயகரமான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இலங்கை அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாக குறைந்துவிட்டதால், வெளிநாடுகளின் உதவியைத்தான் எதிர்பார்த்திருக்கிறது.
அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள், பால் பொருட்களின் விலை அனைத்தும் விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. தினசரி 12 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு என மக்கள் கொடுமையான சூழலை எதிர்கொண்டு வருகிறார்கள்.
Sri Lanka: மீண்டும் எரியும் இலங்கை; தப்பி ஓடிய கோத்தபய ரணில் விக்ரமசிங்கே
இலங்கையில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துவிட்டதையடுத்து, இலங்கையில் உள்ள குடும்பங்களில் 61 சதவீதம் பேர், தினசரி உணவுக்காக செலவிடும் தொகையைக் குறைத்துவிட்டனர். சத்துக் குறைவான, விலை குறைந்த உணவுப் பொருட்களைத்தான் இலங்கை மக்கள் சாப்பிடுகிறார்கள் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையை தேசத்தை மோசமான பொருளாதாரச் சூழலுக்குத் தள்ளிய அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து விலகக் கோரி இன்று கொழும்பு நகரில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய இல்லத்தின் முன் திரண்டு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், மதகுருக்கள், மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று போராட்டம் நடத்தினர்.
sri lanka economic crisis: இலங்கையில் 60 லட்சம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பில்லை: ஐ.நா. எச்சரிக்கை
மூத்த புத்த துறவி ஒமல்பே சோபிதா கூறுகையில் “ இலங்கையில் ஏற்பட்ட பஞ்சத்தால் இந்தப் பிரச்சினை வரவில்லை, இந்த இயற்கை பேரிடர் அரசின் தவறான நிர்வாகத்தால் வந்தது” எனத் தெரிவி்த்தார்
இலங்கையில் பணவீக்கம் 70 சதவீதத்தை எட்டியதால் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. நாட்டை அழிவுக்கு கொண்டு சென்ற ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகக் கோரி மக்கள் கடந்த பி்ப்ரவரி மாதம் முதல் போராடி வருகிறார்கள். ராஜபக்சே குடும்பத்தில் அனைவரும் பதவியிலிருந்து இறங்கிய நிலையில் அதிபர் கோத்தபய மட்டும் விலகவில்லை.
இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி இன்று மக்கள் போராட்டம் நடத்தினர். கொழும்பு நகரில் அதிபர் கோத்தபய ராஜபக்சே இல்லத்தின் முன் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று அரசுக்கு எதிராகவும், கோத்தபய பதவி விலகவும் கோரி போராட்டம் நடத்தினர்.
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீஸார், பாதுகாவலர்கள் வைத்திருந்த தடுப்பை மீறி முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் போராட்டக்கார்ரகள் தடுப்புகளை மீறி அதிபர் இல்ல வளாகத்துக்குள் நுழைந்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு விசா... டார்கெட் இவங்க மட்டும் தான்.. இலங்கை அதிரடி..!
இதையடுத்து கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தவும், கலைக்கவும் போலீஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர், போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழலோடு காணப்பட்டது. அதிபர் இல்லத்திற்குள் இருந்த நீச்சல் குளத்தில் இறங்கி மக்கள் குளித்தனர். விளையாட்டு வீரர்கள் முதல் அந்த நாட்டில் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் இழுத்து மூடப்பட்டன. இந்த நிலையில் அவசர நிலை குறித்து கலந்தாலோசிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
போராட்டம் பெரிய அளவில் கொழும்புவில் பரவி வருவதால் ராணுவம் திணறி வருகிறது. முக்கிய அரசியல்வாதிகள் கடல்மார்க்கமாக தப்பி வருவதாக கூறப்படுகிறது. அவசர நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார். ரணில் அழைப்பு விடும் எந்தக் கூட்டங்களிலும் பங்கேற்பது இல்லை என்று இலங்கை பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சஜித் பிரேமதாசா அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.