இலங்கையில் இன்றும் நாளையும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வலுக்கும் போராட்டத்தினால் நேற்று போலீஸ் தரப்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போராட்டக்காரர்களின் தீவிர செயல்கள் காரணமாக ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்றும் நாளையும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வலுக்கும் போராட்டத்தினால் நேற்று போலீஸ் தரப்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போராட்டக்காரர்களின் தீவிர செயல்கள் காரணமாக ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கொழும்புவில் தங்களது அதிகாரபூர்வ வீடுகளில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு சார்ந்த உயர் அதிகாரிகளின் வீடுகளும் மூடப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
undefined
போராட்டக்காரர்களின் செயல்களுக்கு அஞ்சி அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ஆட்சியில் இருந்து விலகுமாறும், பிரதமராக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவையும் ஆட்சியில் இருந்து விலகுமாறு அந்த நாட்டின் இளைஞர்கள் போர்க் கொடி உயர்த்தி வருகின்றனர். பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. கொழும்புவிற்கு வரும் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.. கோத்தபய ராஜபக்சேவுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!
இலங்கையில் தலைவிரித்தாடும் கடுமையான பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் அந்த நாட்டு ஆட்சி நிலை தடுமாறி வருகிறது. தொடர்ந்து அதிபர் கோத்தபய ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று இன்று கொழும்புவில் போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் போலீஸ் நேற்று ஊரடங்கு உத்தரவுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், இந்த உத்தரவை திடீரென வாபஸ் பெற்றுள்ளது.
நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்தே இலங்கையில் பொருளாதார சிக்கல் தலைவிரித்தாடுகிறது. விலைவாசி உயர்ந்து, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்கள் வேலை வாய்ப்பு இழந்தனர்.
முதலில் பிரதமராக இருந்த ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் கடுமையான போராட்டம் நடத்தி அவரது வீட்டை எரித்தனர். அதற்கு முன்னதாக அங்கிருந்து தப்பியதால் ராஜபக்சே உயிர் பிழைத்தார். இனியும் ஆட்சியில் நீடிக்க முடியாத என்ற நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
elon musk: twitter: கைகழுவும் எலான் மஸ்க்: ட்விட்டரை வாங்கும் டீல் ‘அம்போவா’?
இவரைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்றார். இவருக்கும் எதிராக தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொழும்புவில் இன்று போராட்டம் நடத்த போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில்தான் ஊராடங்கு உத்தரவை போலீஸ் பிறப்பித்து இருந்தது. தற்போது வாபஸ் பெற்றுள்ளது. ஆனால், கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீதிமன்றமே இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதால். போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பாதுகாப்பு கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இன்று நடக்கும் போராட்டம் அமைதியாக நடக்கும் அசம்பாவிதங்கள் இருக்காது என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வன்முறை நடக்காமல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்று ஐநாவவின் மனித உரிமை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த வன்முறையின்போது போலீசாரின் நடவடிக்கையால் 9 பேர் உயிரிழந்தனர்.
இலங்கை அரசு 51 பில்லியன் டாலர் அளவுக்கு கடன்பட்டு, திவாலாகி தற்போது சர்வதேச நிதி ஆணையத்தின் கதவுகளை தட்டிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிரடியாக அதிபர் வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். ஆனால், கோத்தபய ராஜபக்சே அங்கு இல்லை. நேற்று இரவே அவர் தனது இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் தப்பி ஓடி விட்டதாக செய்தி வெளியானது. அவர் ராணுவ தலைமையகத்தில் இருப்பதாகவும், இல்லை நாட்டை விட்டே கடல் மார்க்கமாக தப்பி விட்டார் என்றும் இரண்டு விதமாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், இன்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பிரதமர் பதவியை ரணில் ராஜினாமா செய்த பின்னரும் ஆத்திரம் தீராத போராட்டக்காரர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அன்று இலங்கைக்கு அனுமர் தனது வாலால் தீ வைத்து அழித்தார் என்று கூறப்படுவது உண்டு. இன்று தனது சொந்த நாட்டு மக்களால் அதிபர், பிரதமரின் வீடுகள் எரிந்து கொண்டு இருக்கின்றன.