எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.. கோத்தபய ராஜபக்சேவுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Jul 9, 2022, 7:55 AM IST
Highlights

ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகையால், கொழும்பு துறைமுகம் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதிபர் வீட்டின் அருகே பொதுமக்கள் போராட்டம் நடத்த தடை விதிக்க முடியாது என்று இலங்கை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை ரொம்ப மோசமடைந்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டதன் காரணமாக ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என போராட்டம் வெடித்தது. இதனால், வேறு வழியின்றி ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இதையும் படிங்க;- sri lanka economic crisis: இலங்கையில் 60 லட்சம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பில்லை: ஐ.நா. எச்சரிக்கை

இந்நிலையில், கடந்த சில நாட்களாக போராட்டம் சற்று ஒய்திருந்த நிலையில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடியை பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய கொழும்புவில் உள்ள அதிபரின் வீட்டின் அருகே  இன்று மற்றும் நாளை  போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகையால், கொழும்பு துறைமுகம் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் , அதிபர் வீடு உள்ள பகுதியில் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், போராட்டக்காரர்களை தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அத்துடன், போராட்டக்காரர்களை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தது. 

இதையும் படிங்க;-  SriLanka's crisis : இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு! - கட்டுக்கடங்காத கூட்டும்! மக்கள் தவிப்பு!

click me!