மூவர்ணக் கொடி மீது கால் வைத்து நிற்பதா? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் நெகிழ வைத்த செயல்!

By SG Balan  |  First Published Aug 23, 2023, 3:40 PM IST

தென் ஆப்ரிக்காவில் குழு புகைப்படம் எடுக்க மேடைக்கு வந்த பிரதமர் மோடி, தான் நிற்கவேண்டிய இடத்தில் அடையாளமாக தரையில் வைக்கப்பட்டு இருந்த இந்திய தேசியக் கொடியை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.


பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய சார்பாக கலந்துகொள்ள சென்றுள்ளார். ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களைச் சந்திக்கிறார்.

இந்நிலையில், இன்று தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசாவுடன் புகைப்படம் எடுக்கும் தருணத்தில் பிரதமர் மோடி செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது, நெகிழச் செய்துள்ளது.

Tap to resize

Latest Videos

குழு புகைப்படம் எடுக்கும்போது, தலைவர்கள் நிற்கவேண்டிய இடத்தைக் குறிக்கும் அடையாளமாக, அந்தந்த நாடுகளின் தேசியக் கொடிகள் தரையில் சிறிய அளவில் வைக்கப்பட்டிருந்தன. குழு புகைப்படம் எடுக்க மேடைக்கு வந்த பிரதமர் மோடி, உடனே கீழே அவர் நிற்கவேண்டிய இடத்தில் வைத்திருந்த இந்திய தேசிய மூவர்ணக் கொடியை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

நிற்கும் நிலையைக் குறிக்க, ஒவ்வொரு தலைவர் இடமும் நாட்டின் கொடியால் குறிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மூவர்ணக் கொடியை மிதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய, உடனடியாக அதை எடுத்து தனது கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். ஆனால், தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா அவர்களது கொடியை மிதித்த… pic.twitter.com/Xp37nu1yhb

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

ஏற்கனவே தனது நாட்டின் கொடியை கவனிக்காமல் அதை மிதித்தபடி நின்றிருந்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, பிரதமர் மோடியின் செயலைப் பார்த்துவிட்டு, தானும் தங்கள் நாட்டுக் கொடியை கையில் எடுத்துக்கொண்டார். அரங்கில் இருந்த ஒருவர் அவரிடம் வந்த அந்தக் கொடியை வாங்கிச் சென்றார். பிரதமர் மோடியின் இந்த செயல் இந்திய மக்களிடையே நெகிழ்சசியை ஏற்படுத்தி உள்ளது. 

ஜோகன்னஸ்பர்க்கில் பிரதமர் மோடிக்கு ஆர்மோனிய இசையுடன் ஆன்மீக வரவேற்பு!

click me!