பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப்,மற்றும் அதிபர் இமானுவேல் மெக்ரன் ஆகியோரை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுகிறார். இந்நாட்டு தலைவர்களுடனான சந்திப்பில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், அதில் பாகிஸ்தானின் தலையீடு குறித்தும் அவர் எடுத்து கூறி அந்நாடுகளின் ஆதரவை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ,சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் ரவுண்டு கட்டும் நிலையில் உலகத்தலைவர்களின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் பாரத பிரதமர் மோடி இறங்கி உள்ளார், பிரான்ஸ், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் விரைகிறார்.
இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் சீனாவுடன் கைகோர்த்து பாகிஸ்தான் சர்வதேச நாடுகளின் அதரவை பெற முயற்ச்சித்து வரும் நிலையில் , இந்தியாவும் அதை தொடரந்து முறியடித்து வருகிறது. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமிபத்தில் சீனா சென்றுவந்தார், அவரைத்தொடரந்து தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்று ரஷ்யாவின் ஆதரவை பெற்றுள்ளார், இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள பிரான்ஸ், மற்றும் இஸ்லாமிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ஐந்து நாள் சுற்றுபயணமாக அவரது பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் முதலில் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று நாளை வரை அங்கு தங்கியிருந்து பின்னர் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் பஹ்ரைனுக்கு விரைகிறார். மிண்டும் பிரான்ஸ் நாட்டி திரும்பும் மோடி, பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப்,மற்றும் அதிபர் இமானுவேல் மெக்ரன் ஆகியோரை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுகிறார். இந்நாட்டு தலைவர்களுடனான சந்திப்பில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், அதில் பாகிஸ்தானின் தலையீடு குறித்தும் அவர் எடுத்து கூறி அந்நாடுகளின் ஆதரவை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் ஏற்கனவே இந்தியாவுடன் நல்ல உறவில் இருந்து வரும் நிலையில் பிரான்ஸ் பயணம் மோடிக்கு வெற்றிப்பயணமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அத்துடன் பிரான்ஸ் தலைநகரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அங்குள்ள இந்திய மக்களிடம் பிரதமர் உரையாற்றுகிறார் அதைத்தொடர்ந்து 25 ஆம் தேதி பிரான்சில் தொடங்கும் ஜி 7 நாடுகள் மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார். இவ்வாறு அவரது பயணக்குறிப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.