இந்தியாவிடம் வாலாட்டக்கூடாது...! பஞ்சாயத்து தலைவர் ட்ரம்புக்கு ரஷ்யா எச்சரிக்கை... உச்சகட்ட கிலியில் சீனா, பாகிஸ்தான்...!

By vinoth kumar  |  First Published Aug 22, 2019, 5:45 PM IST

இறையாண்மையை காக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளில் மூன்றாவது  நாடு  தலையிடக்க கூடாது என ரஷ்யா திட்டவட்டமாக அப்போது தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தானிடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவின் கருத்து அமெரிக்காவிற்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றே கருதப்படுகிறது. 


இந்தியா தன் இறையாண்மையை காக்க காஷ்மீர் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கையில் மூன்றாவது நாடு தலையிடக்கூடாது என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இது பாகிஸ்தான், சீனா, மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே மத்தியஸ்தம்  செய்ய துடிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை என கருதப்படுகிறது. 

இந்தியா காஷ்மீரில்  மேற்கொண்ட நடவடிக்கைக்கு  பாகிஸ்தான் தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன், சீனாவின் உதவியுடன் அதை ஐநா பாதுகாப்பு கவுனிசில்வரை கொண்டு சென்று சர்வதேச பிரச்சனையாக்கி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களையும் தொலைபேசியில் அழைத்து இருநாட்டு தலைவர்களும் சுமூகமாக பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.  ஆனால் சில தினங்களிலேயே இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க தயாராக உள்ளது என மீண்டும் பிரச்சனையை துண்டியிருக்கிறார் ட்ரம்ப் .  இந்த நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டு, காஷ்மீர் விவகாரம் குறித்து அந்நாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  

Latest Videos

தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பொது பிரச்சினைகளில் இருநாடுகளும் கூட்டாக இணைந்து செயலாற்றுவதை இச் சந்திப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் காஷ்மீர் பிரச்சினையில் தனது இறையாண்மையை காக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளில் மூன்றாவது  நாடு  தலையிடக்க கூடாது என ரஷ்யா திட்டவட்டமாக அப்போது தெரிவித்ததுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தானிடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவின் கருத்து அமெரிக்காவிற்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றே கருதப்படுகிறது. அத்துடன் இந்தியாவின் சந்திரயான் 2 திட்டத்திற்கும் ரஷ்யா தனது பாராட்டுகளைத் அஜித் தோவாலிடம் தெரிவித்துக்கொண்டது. செப்டம்பர் மாத துவக்கத்தில்  பிரதமர் மோடி கிழக்கு நாடுகளின் பொருளாதார மாநாட்டிற்காக ரஷ்யா செல்ல உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.

click me!