துருக்கி மற்றும் சிரியாவில் 24 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம்... 2300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!

Published : Feb 06, 2023, 08:28 AM ISTUpdated : Feb 06, 2023, 08:51 PM IST
துருக்கி மற்றும் சிரியாவில் 24 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம்... 2300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!

சுருக்கம்

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து ரிக்டர் அளவுகோளில் 6 ஆக பதிவாகியுள்ளது. இதேபோல் சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து ரிக்டர் அளவுகோளில் 6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் 6.7 மற்றும் 7.8 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின் நர்டஹி நகரில் இருந்து 26 கி.மீ. கிழக்கே 17 கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் துருக்கியிலும், சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரியாவுக்கு வடக்கே துருக்கி இருக்கிறது. 

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் பெரிய கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதை அடுத்து அதிகாலை வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். 

இந்த நிலநடுக்கத்தால் 2300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து நாசமாகி உள்ளதால் பலர் அதில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், உயிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகாரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு  மேற்கு அஜர்பைஜான் கடுமையான  நிலநடுக்கம் ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

 

PREV
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!