
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின், கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்து செய்தியை, அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். பொங்கல் வாழ்த்து செய்தியை வீடியோவில் பதிவு செய்த ஜஸ்டின், “தமிழில் வணக்கம்” தெரிவித்து அவரது உரையை தொடங்குகிறார்.
கனடா, ஆங்கில மொழிகளில் பேசும் அவர், தமிழர்களின் பங்கை சிறப்பித்துள்ளார். கனடாவின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு மிக முக்கியமானது என்றும், தமிழர்கள் அனைவருக்கும், தனது தை பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும் பேசிஉள்ளார்.
ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கனடா கொண்டாடி வருகிறது, இதனையும் தன்னுடைய பொங்கல் வாழ்த்து செய்தியின்போது குறிப்பிட்ட அவர், கனடா தமிழ் சமூகத்தின் வலுவான பாரம்பரியத்தை பிரதிபலிக்க எல்லோரையும் ஊக்குவிக்கிறேன் என்றார்.
கனடா பிரதமர் ஜஸ்டின், பொங்கல் வாழ்த்து செய்திக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியை தெரிவித்துள்ளனர். 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து பகிர்ந்து கொண்டனர்.