நடுக்கடலில் படகு மூழ்கி 100 பேர் பலி – இத்தாலி அருகே விபத்து

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 02:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
நடுக்கடலில் படகு மூழ்கி 100 பேர் பலி – இத்தாலி அருகே விபத்து

சுருக்கம்

லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியது. இதில் பயணம் செய்த 100 பேர் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

லிபியா நாட்டில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு மத்திய தரைக்கடலில், இத்தாலி நோக்கி அகதிகள் படகு சென்று கொண்டிருந்த்து. லிபியா மற்றும் இத்தாலிக்கு இடையே 50 கி.மீ. தூரத்தில் சென்று கொண்டிருந்த அந்த படகு எதிர்பாராத விதமாக திடீரென கடலில் மூழ்கியது.

இந்த விபத்து பற்றி அறிந்ததும் பிரான்ஸ் கடற்படை கப்பலும், இரண்டு வர்த்தக கப்பல்கள் மற்றும் விமானங்களும் கடலுக்கு சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டன. ஆனால், கடலில் விழுந்து தண்ணீரில் தத்தளித்த 4 பேரை மட்டுமே உயிருடன் மீட்டனர். 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

விபத்து ஏற்பட்ட படகில் நூற்றுக்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். இதனால், அதிக பாரம் தாங்காமலும், கரையை சென்றடையும்போது, ஏற்பட்ட ஆர்ப்பறிக்கும் அலையாலும் படகு மூழ்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்க்கப்பட்டவர்கள் தவிர, 100க்கு மேற்பட்டோர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், அந்த படகுகளில் பயணம் செய்தவர்கள், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!
டிரம்புக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கிய தமிழர்..! ‘சிக்கலானவர்’ எனச் சித்தரித்த எலான் மஸ்க்