மனிதர்களை மிஞ்சும் வகையில் நாயின் அறிவாற்றல்...மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி!

Asianet News Tamil  
Published : Jun 27, 2018, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
மனிதர்களை மிஞ்சும் வகையில் நாயின் அறிவாற்றல்...மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி!

சுருக்கம்

Police dog in Spain appears to perform CPR on partner

ஸ்பெயின் நாட்டில் மோப்ப நாய்களுக்கு இருக்கும் அறிவாற்றலை கண்டு அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.  5 அறிவு உள்ளதால் விலங்குகள் என்று நாம் சொல்கிறோம்.  ஆனால் 6 அறிவு உள்ள மனிதர்கள் செய்யாததை கூட விலங்குகள் செய்து வருகின்றனர். 

ஸ்பெயினில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடுரோட்டில் மயங்கி விழுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாய்களுக்கு காவல்துறையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். மாரடைப்பு ஏற்பட்ட மனிதனுக்கு எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும்' என அந்த நாய் கற்றுக் கொடுக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான  மாட்ரிட்டில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் நாய்க்கு பயிற்சியளித்த காவல் அதிகாரி மயங்கி விழுவது போல் நடித்தார். அவர் பயிற்சியளித்த நாய் அதிகாரியின் வயிற்றிலும், மார்பிலும் குதித்து மீண்டும் மூச்சு வருவதற்கு முயற்சி எடுத்தது அனைவரையும் வியப்படை செய்துள்ளது. 

அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். ட்விட்டரில் வெளியான அந்த வீடியோ 11,200 தடவை ரீ ட்வீட் செய்யப்பட்டு, சுமார் 2 மில்லியன் மக்களைச் சென்று சேர்ந்துள்ளது. நாய்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி எத்தனை தூரம் பலனளிக்கும் என்று தெரியாவிட்டாலும், இதைப் பார்த்து மனிதர்களும் முதலுதவி செய்ய கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் என மாட்ரிட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இனி படிக்கிறது ரொம்ப ஈஸி! போரடிக்கிற பாடப்புத்தகத்தை ஜாலியான ஆடியோவாக மாற்றும் கூகுள் AI!
ஆசைப்பட்ட நோபல் பதக்கம் கையில் வந்தாச்சு! ஆனா ஒரு கண்டிஷன்.. நோபல் கமிட்டி போட்ட குண்டு!