தற்போது நமது ராணுவம் உள்ள நிலையில் , பாகிஸ்தானுடன் ஒரு போரை நடத்த நினைத்தால் 7 முதல் 10 நாட்களுக்குள் பாகிஸ்தான் ராணுவத்தை சிதறடிக்கும் வலிமை இந்தியாவுக்கு உள்ளது என்றார், அந்நாட்டு ராணுவத்தை சிதறடிக்க இந்தியராணுவத்திற்கு பத்து நாட்கள் போதும் என்றார்.
போர் ஏற்பட்டால் பாகிஸ்தானை அடித்து நொறுக்க பத்து நாட்கள் போதும் என இந்திய பிரதமர் மோடி ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார் . எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வரும் நிலையில் மோடி இவ்வாறு கூறியுள்ளார் . காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அது முழுவதுமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் சீனாவுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்து வருகிறது. அதே போல் இந்தியா பாக் எல்லையில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ எத்தனித்து வருகின்றனர் .
இந்நிலையில் இந்திய ராணுவத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புத்துறை இறங்கியுள்ளது . இந்த நிலையில் டெல்லி தேசிய மாணவர் படையின் பேரணி அணிவகுப்பை பார்வையிட்ட பிரதமர் மோடி , அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் . அதில் என்சிசி படையினரின் சிறந்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார் . பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி , இந்தியா இளம் தலைமுறையினரால் வேகமாக முன்னேறி வருகிறது என்றார் . இந்தியாவின் பாதுகாப்பை பொருத்தவரையில் தீவிரவாதிகளை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அழிக்கும் துல்லிய தாக்குதல்களை இந்தியா நடத்திக் காட்டியதை சுட்டிக்காட்டினார் .
தற்போது நமது ராணுவம் உள்ள நிலையில் , பாகிஸ்தானுடன் ஒரு போரை நடத்த நினைத்தால் 7 முதல் 10 நாட்களுக்குள் பாகிஸ்தான் ராணுவத்தை சிதறடிக்கும் வலிமை இந்தியாவுக்கு உள்ளது என்றார், அந்நாட்டு ராணுவத்தை சிதறடிக்க இந்தியராணுவத்திற்கு பத்து நாட்கள் போதும் என்றார். பல ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தானுக்கு மறைமுக போர் நடந்து வருகிறது என்ற பிரதமர், கடந்த கால ஆட்சியாளர்கள் வீர உரை நிகழ்த்தினார்களே தவிர எல்லையை தாண்டி தாக்கும் உத்தரவுகளை பிறப்பிக்க வில்லை என்றார். இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் ஜம்மு-காஷ்மீரின் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது . தீவிரவாதம் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மோடி கூறினார் .