சீனாக்காரன் உள்ளே வராதே...!! எஜமானனையே எகிறி அடிக்கும் இலங்கை...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2020, 6:02 PM IST
Highlights

சீனப்பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்கும் கொள்கையை ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையில்  கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து சீனப் பயணிகளுக்கு விசா வழங்குவதை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது . அறிவியல் மருத்துவம் கண்டுபிடிப்பு என மிக வேகமாக வளர்ந்து வரும் சீனாவுக்கு , கொரோனா  வைரஸால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த காய்ச்சலால் சுமார் 106 பேர் உயிரிழந்துள்ளனர் .  இது சீனாவையே நிலைகுலைய வைத்துள்ளது .  

இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் இந்த வைரஸை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என கைவிரித்து உள்ளார் . இந்நிலையில்  மற்ற நாடுகளுக்கு செல்லும் சீனப் பயணிகள் அந்தந்த நாட்டு விமான நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் . அவர்கள் விமான நிலையங்களில்  தெர்மல் டெஸ்ட் முறையில் பரிசோதனை செய்யப்படுகின்றனர் . இந்நிலையில் அமெரிக்கா , ஆஸ்திரேலியா ,இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.   இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக சீன பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்குவதை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது . 

இந்நிலையில் ஜனவரி 19-ம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வந்த 40 வயது சீனப்பெண் ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் ஜனவரி 25 அன்று இலங்கை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது கண்டறியப்பட்டார்,  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனது இலங்கை துணைத் தூதரக அமைச்சகத்தின் தொற்றுநோய்கள் நிபுணர்  சுராத் சுரவீரா தெரிவித்துள்ளார் . சீனப்பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்கும் கொள்கையை ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 
 

click me!