
Plane exploded at London Southend Airport : இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானம் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த 241 பயணிகள் உள்ளி்ட்ட 260 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல கட்ட விசாரணைகள்நடைபெற்று வருகிறது. விமான விபத்திற்கு காரணம் என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், விமானத்திற்கு தேவையான எரிபொருள் கட்ஆப் செய்யப்பட்டதே விபத்திற்கு காரணம் என பைலட்களின் குரல் பதிவின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மறைவதற்க்குள் லண்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் விமான விபத்து
லண்டன் சவுத்தென்ட்டில் இருந்து விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. பிரிட்டனில் உள்ள சவுத்தென்ட் விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. பீச் கிராஃப்ட் கிங் ஏர் பி200 என்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. ஈஸி ஜெட் நிறுவனத்தின் இந்த சிறிய விமானம் நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி மாலை நான்கு மணிக்கு விபத்து நிகழ்ந்தது. இந்த சிறிய விமானம் 12 மீட்டர் நீளம் கொண்டது.
அவசரகால சேவைகள் தங்கள் பணிகளைச் செய்து வருவதாகவும், மற்றவர்கள் சம்பவ இடத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் சவுத்தென்ட் எம்.பி. டேவிட் பர்டன் சாம்ப்சன் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார். ஈஸி ஜெட் உட்பட பல விமான நிறுவனங்கள் பிரிட்டனின் தெற்குப் பகுதியில் உள்ள இந்த விமான நிலையத்தை தளமாகப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு வாரமும் 20 வழித்தடங்களில் 122 விமானங்களை ஈஸி ஜெட் இயக்குகிறது. விபத்தைத் தொடர்ந்து, பாரிஸ், அலிகாண்டே, ஃபாரோ, பால்மா, மல்லோர்கா ஆகிய இடங்களுக்கான விமானங்களை ஈஸி ஜெட் ரத்து செய்துள்ளது.