plane crash in china: சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து: மலைப்பகுதி காட்டுத்தீ காரணமா?

By Pothy RajFirst Published Mar 21, 2022, 2:14 PM IST
Highlights

plane crash in china: சீனாவின் தெற்கு மாகாணமான குவான்ஸி மண்டலத்தில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சீனாவின் தெற்கு மாகாணமான குவான்ஸி மண்டலத்தில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

குவான்ஸி மாகாணத்தின் குன்மிங் நகரிலிருந்து குவாங்ஜு நகருக்கு 133 பயணிகள், விமான பணியாளர்களுடன் சீன ஈஸ்டர்ஸ் ஏர்லைன்ஸ் நிறுனத்துக்குச் சொந்தமான எம்யு 5357 என்ற போயிங் 737 விமானம் புறப்பட்டது. ஆனால், புறப்பட்டு சென்றபின் உரிய நேரத்துக்குள் குவாங்ஜு நகருக்கு விமானம் சென்று சேரவில்லை.இதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் மலைப்பகுதியில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. மலைப்பகுதியில் பற்றி எரிந்துவரும் காட்டுத்தீயால் விமானம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  இந்தவிபத்தில் பலியானவர்கள் குறித்த எந்த விவரமும்இதுவரை தெரியவில்லை. 

Latest Videos

தகவல்அறிந்து மீட்புப்படையினர், தீதடுப்பு படையினர் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

click me!