
ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில், ஃபிலிப்பைன்ஸ் ஆசிரியை அழகி Kylie Versoza, சர்வதேச பட்டம் வென்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், இந்த ஆண்டிற்கான சர்வதேச அழகிப் போட்டி நடைபெற்றது. 56-வது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில் 69 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், ஃபிலிப்பைன்ஸை சேர்ந்த Kylie Versoza சர்வதேச அழகி பட்டம் வென்றார். 24 வயதான பிலிப்பைன்ஸ் அழகி Kylie Versoza மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.