இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.250.. பாகிஸ்தானில் விலையேற்ற அல்லு விட்ட இம்ரான்கான்!

By Asianet TamilFirst Published Nov 5, 2021, 10:02 PM IST
Highlights

பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பில் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.250 ஆக விற்கப்படுகிறது. வங்கதேசத்தில் ரூ.200க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானில் நாம் லிட்டர் பெட்ரோலை ரூ.138க்குதான் நிர்ணயித்துள்ளோம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எடுத்துக்கூறி பாகிஸ்தானில் அப்பொருட்களின் விலையை உயர்த்திதான் ஆக வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் மக்களிடம் கெஞ்சியுள்ளர்.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021-23ஆம் ஆண்டுகளில் 51.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி இருந்தால்தான் பாகிஸ்தான் கடன்களிலிருந்து மீள முடியும் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் மக்களுக்கு செய்தி விடுத்துள்ளார்.  அதில், “பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துத்தான் ஆக வேண்டும். இல்லையெனில்  நம் நாடு கடனில் மூழ்கிவிடும். 

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை அதிகரித்து விட்டதாக மக்கள் கூறினாலும், இப்போதும் இங்குதான் விலை குறைவு என்றே நான் சொல்வேன். பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பில் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.250 ஆக விற்கப்படுகிறது. வங்கதேசத்தில் ரூ.200க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானில் நாம் லிட்டர் பெட்ரோலை ரூ.138க்குதான் நிர்ணயித்துள்ளோம். பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை அதிகரிக்காவிட்டால், நம் நாடு கடனில் மூழ்கிவிடும்.” என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.8 14 காசுகள் அதிகரித்துள்ளன. இதனால், பெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அரசை குறை கூறி வருகின்றனர். இந்நிலையில்தான் பெட்ரோல் விலையை உயர்த்த இந்தியாவை உதாரணம் காட்டி மக்களிடம் கெஞ்சியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். மேலும் இந்திய  மதிப்பில் ஒரு ரூபாய் என்பது பாகிஸ்தான் மதிப்பில் ரூ 2.29 ஆகும். எனவேதான் லிட்டர் பெட்ரோல் ரூ.250 என்றும் இம்ரான் கான்பேசியுள்ளார். 

click me!