பாகிஸ்தானில் கொரோனா படுத்தும்பாடு... சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நேர்ந்த கதி..!

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2020, 2:08 PM IST
Highlights

கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க போதிய பாதுகப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால்  சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு கொரோனா பரவி வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க போதிய பாதுகப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால்  சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு கொரோனா பரவி வருவதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பாகிஸ்தானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. 3864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 429 பேர் குணமடைந்துள்ளனர்; 28 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.அங்கு இதுவரை 39ஆயிரத்து183 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பாக். பிரதமர் இம்ரான் கான் ஏழை மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளார். இதற்கிடையே பலுசிஸ்தான் மாகாண அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் 12க்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் சிகிச்சைக்கான மருந்துகள் ஆகியவற்றை வழங்கக் கோரி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இது தொடர்பாக போலீசார் 150 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். கிச்சையளித்த மருத்துவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. நுாற்றுக்கணக்கான பிராணிகள் பலிபாகிஸ்தானில் ஊடரங்கு உத்தரவைத் தொடர்ந்து முக்கிய நகரங்களில் நாய், பூனை, முயல் உள்ளிட்ட வீட்டுப் பிராணிகளை விற்பனை செய்யும் கடைகளும் இரு வாரங்களாக மூடப்பட்டுள்ளன.

இதனால் கூண்டுகளில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான செல்லப் பிராணிகள் காற்று வெளிச்சம் உணவின்றி பட்டினியால் கதறுகின்றன. இதையடுத்து பிராணி நல அமைப்புகள் போலீஸ் அனுமதியுடன் பல கடைகளை திறந்து பார்த்தபோது நுாற்றுக்கணக்கான பிராணிகள் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

click me!