ஆண்டவா இது யார் செய்த பாவம்..!! ஒரே நாளில் 2000 பேர் துடிதுடித்து இறந்த பரிதாபம்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 8, 2020, 1:25 PM IST
Highlights

 அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி இந்த  வைரஸால் உயர்ந்தவர்கள் எண்ணிக்கை 12, 854 ஆக உயர்ந்துள்ளது ,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர் .  கிட்டத்தட்ட 4,00,412 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர் . 

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த  உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .  அமெரிக்காவில் சுமார் 4 லட்சத்து 412 பேர் கொரோனா வைரசுக்கு  பாதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதால்  அங்கு ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,854 ஆக உயர்ந்துள்ளது .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் 180 க்கும் அதிகமான நாடுகளை கடுமைதாக பாதித்துள்ளது .  இந்த வைரஸால் அமெரிக்கா ,  இத்தாலி ,  ஸ்பெயின் ,  ஈரான், தென்கொரியா ,  இங்கிலாந்து ,  உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . 

இந்நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது ,  ஆரம்பத்தில் இந்த வைரஸை எதிர்கொள்வதற்கு எல்லாவகையிலும் அமெரிக்க தயாராக இருக்கிறது என  அதிபர் டிரம்ப் கூறிவந்த நிலையில் ,  தற்போது நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளின் உதவியை எதிர் நோக்கி காத்திருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.  இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் இந்த வைரஸின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடையும் என்றும் அப்போது நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 ஆயிரத்துக்கும் அதகமானோர் உயிரிழக்கக்கூடும் என்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது . அதேபோல் அமெரிக்காவில் தற்போது உள்ள மருத்துவ பற்றாக்குறையை  சீர் செய்ய வேண்டும் ,  வெண்டிலேட்டர்களை போதுமளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது . 

 அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி இந்த  வைரஸால் உயர்ந்தவர்கள் எண்ணிக்கை 12, 854 ஆக உயர்ந்துள்ளது ,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர் .  கிட்டத்தட்ட 4,00,412 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர் .  இதுவரையில் 21 ஆயிரத்து 674 பேர் இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து குணம் அடைந்துள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதே நிலை நீடித்தால்  முன்கூட்டியே  பொது சுகாதாரத்துறை கணித்துள்ளதை போல  வைரஸ் உச்சக்கட்டத்தை எட்டும்போது  உயிரிழப்புகள் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கக்கூடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்க மக்கள் உரைந்துள்ளனர். அதாவது இந்த  வைரஸ் உச்சக்கட்டத்தை எட்டும் போது நாளொன்றுக்கு 3,130 பேர் இறப்பர் ,

 ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 81, 766 ஆக உயரும் என்றும் , அமெரிக்கா முழுவதும் 36, 500க்கும் மேற்பட்ட மருத்துவமனை படுக்கைகள் அவசியம் என்றும், சுமார்  16, 300க்கும் அதிகமான ( ICU)அவரச சிகிச்சை பிரிவுகள்  தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் மேலும் சமூக தொலைதூர நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டால் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

 

 

click me!