“அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனாவைப் போல பாகிஸ்தானில் நீண்ட நாட்களுக்கு ஊரடங்கை தொடர முடியாது. பாகிஸ்தானில் தினக்கூலியை நம்பி இரண்டரை கோடி மக்கள் உள்ளனர். ஊரடங்கு காரணமாக அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள 15 கோடி ஏழை, எளிய மக்களும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இனியும் ஊரடங்கை தொடர்ந்தால், அது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்."
கொரோனா வைரஸுடன் வாழ மக்கள் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கொரோனாவால் இதுவரை 40,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 873 பேர் உயிரிழந்துள்ளார்கள். 11,341 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பாகிஸ்தானிலும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஊரங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பிற நாடுகளைப் போல நீண்ட நாட்களுக்கு ஊரடங்கை தொடர முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் இம்ரான் கான் கூறுகையில், “அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனாவைப் போல பாகிஸ்தானில் நீண்ட நாட்களுக்கு ஊரடங்கை தொடர முடியாது. பாகிஸ்தானில் தினக்கூலியை நம்பி இரண்டரை கோடி மக்கள் உள்ளனர். ஊரடங்கு காரணமாக அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள 15 கோடி ஏழை, எளிய மக்களும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இனியும் ஊரடங்கை தொடர்ந்தால், அது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.
உலகில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை கொரோனா வைரஸ் நம்மைவிட்டு போகாது. அதேவேளையில் தனி மனித இடைவெளி, முக கவசம் அணிவது, கைகளை கழுவுவது உள்ளிட்ட சில கடுமையான விதிமுறைகளை தொடர்ந்து தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இனிவரும் நாட்களில் தொற்று பாதிப்பும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க சுகாதார வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுடன் வாழ மக்கள் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழை மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது” என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.