இறங்கி வந்து நட்பு பாராட்டும் அமெரிக்கா...!! பட்டும் படாமல் கெத்தை மெயின்டன் செய்யும் மோடி..!!

By Ezhilarasan Babu  |  First Published May 16, 2020, 7:50 PM IST

இந்நிலையில் கொரோனாவுக்கு  எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வெண்டிலேட்டர்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் . அதேபோல கொரோனா வைரசுக்கு  இந்த ஆண்டுக்குள் மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன் . 


இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு  இந்திய பிரதமர் மோடி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார், கொரோனா போரில்  இந்தியாவுடன் இணைந்து செயல்படப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில் ,    இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் நமது உலகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம் என மோடி  பதிலளித்துள்ளார்.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில்  உலக அளவில் 46 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய் தொற்று ஆளாகியுள்ளனர்.  இதுவரை  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது .  அமெரிக்கா ஸ்பெயின் ரஷ்யா பிரிட்டன் இத்தாலி பிரேசில் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவிலேயே அதிக நோய்த்தொற்றும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .  அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவின் பொருளாதாரம் வரலாறுகாணத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது . 

Latest Videos

தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிற பாதிப்புக்கு சீனா தான் காரணமென அமெரிக்கா சீனாவின் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் இரு நாட்டுக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது .  அதுமட்டுமில்லாமல் சீனா உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்ள நேரம் வந்துவிட்டது என ட்ரம்ப்  காட்டமாக தெரிவித்துள்ளார் . இந்நிலையில்  தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ள ட்ரம்ப் , கொரோனா வைரசுக்கு எதிரான போரை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து  எதிர் கொள்ளும் என தெரிவித்துள்ளார் . கண்ணுக்குத் தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம்  என தெரிவித்துள்ளார் .  மேலும் , பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது எல்லோருக்கும் தெரியும் , இந்நிலையில் கொரோனாவுக்கு  எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வெண்டிலேட்டர்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கும் .  அதேபோல கொரோனா வைரசுக்கு  இந்த ஆண்டுக்குள் மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன் . 

தடுப்பூசி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா  செயல்பட்டு வருகிறது ,  இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா வீழ்த்தும் என பதிவிட்டுள்ளார் .  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் உருவாகியுள்ள நிலையில் ட்ரம்ப் இந்தியாவை தன் நண்பனாக காட்ட முயற்சி செய்துள்ளார் . இந்நிலையில்  டிரம்பின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  இந்திய பிரதமர் மோடி இந்த உலகளாவிய தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் கூட்டாக ஒன்றிணைந்து போராடி வருகிறோம் , இந்தியா அமெரிக்காவின் நட்பிற்கு அதிக சக்தி உள்ளது எனவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு உலகத்தை ஆரோக்கியமாகவும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடவும் முடிந்த வரை போராட வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார் . 

 

click me!