இந்தியாவுடன் உறவாடிக்கொண்டே கழுத்தை அறுக்கிறார் அமெரிக்க அதிபர் .!! அப்படி என்னதான் செய்தார் ட்ரம்ப்.!!

By T BalamurukanFirst Published May 16, 2020, 7:13 PM IST
Highlights

இந்த நிலையில் சீனாவில் ஆப்பிள் லாவா போன்ற கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இந்த கம்பெனிகள் எல்லாம் கொரோனாவிற்கு பிறகு சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்து இந்தியாவில் அந்த கம்பெனிகள் தொடங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

சீனாவில் இருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்க நிறுவனங்கள் வேறு எந்த நாட்டிற்கும் செல்லக்கூடாது. அமெரிக்காவிற்கு தான் வரவேண்டும். அதையும் மீறி வேறுநாட்டிற்கு சென்றால் வரி சலுகைகளை ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

உலக நாடுகளின் உற்பத்தி சந்தையாக மாறியிருக்கிறது சீனா. சீனாவில் இருந்து எந்த ஒரு பொருளையும் இறக்குமதி செய்யும் அளவிற்கு உலக நாடுகள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்கா ரெம்ப நிலைகுலைந்து போய் இருக்கிறது. பிரான்ஸ் இத்தாலி ரஷ்யா ஸ்பெயின் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் எல்லாம் கொரோனாவை பரப்பியது சீனா தான். இதனால் தான் உலக நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து போயிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் ரெம்பவே சீர்குலைந்து போய் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கிறது. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், அதற்கு வழங்கி வந்த நிதியை பெரும்அளவு குறைத்துவிட்டதாகவும் தெரிவித்தார் ட்ரம்ப். கொரொனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என்றும் அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.


இந்த நிலையில், மற்றநாடுகள் எல்லாம் சீனாவை பொருளாதார விலகல் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ,அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க நிறுவனங்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், சீனாவில் ஆப்பிள், லாவா போன்ற கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இந்த கம்பெனிகள் எல்லாம் கொரோனாவிற்கு பிறகு சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்து இந்தியாவில் அந்த கம்பெனிகள் தொடங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் அந்த கம்பெனிகளுக்கு திடீர்  தடைபோட்டு இருப்பது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவுடன் உறவாடிக்கொண்டே கழுத்தை அறுக்கிறார் ட்ரம்ப்.என்கிற விமர்சனம் தற்போது எழுந்திருக்கிறது.

click me!