இந்தியாவில் சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுகிறார்கள்… ரொம்ப கவலைப்படும் இம்ரான்கான் !!

By Selvanayagam P  |  First Published Aug 6, 2019, 7:50 PM IST

காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.சபை வரை கொண்டு செல்வோம் என்றும், இந்தியாவில் சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுவதை சர்வதேச சமூகத்தின் முன் எடுத்துரைப்போம் என்றும் பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
 


ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அம்மாலிம் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப் பிரிவும் ரத்து செய்யப்பட்டது, 

Latest Videos

இதற்கான உத்தரவை மத்திய அரசு நேற்று பிறப்பித்தது.  இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.  இது தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டம் இன்று கூடியது. 

இந்தக் கூட்டத்தில் பேசிய  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,   காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து சர்வதேச சமூகத்தின் முன் எடுத்துரைப்போம் எனவும் இம்ரான்கான்  தெரிவித்தார். 

click me!