இந்தியா மீது பாய்ந்து குதறும் சீனாவின் செல்லப்பிள்ளை..!! கொக்கரிக்கும் இம்ரான்கான்..!!

By Ezhilarasan Babu  |  First Published May 28, 2020, 5:53 PM IST

 gilgit-baltistan பகுதியை சீனாவுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதுடன், அப்பகுதியில் சீன ராணுவத்தையும் அனுமதித்துள்ளது. 


இந்தியா தன் விரிவாக்க கொள்கைகளால் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது எனவும், தெற்காசியப் பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.  ஏற்கனவே சீனா,  இந்திய எல்லையில் படைகளை குவித்து இந்தியாவை அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவின் செல்லப்பிள்ளையான பாகிஸ்தான் தற்போது இந்தியா மீது இப்படி ஒரு பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.  இது இந்தியாவை வம்பிழுக்கும் வேலையென சர்வதேச அரசியல் நோக்ககர்களால் விமர்சிக்கப்படுகிறது.  உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது.  ஆனால் இந்தியா சீனா, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான், சீனாவுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிரான பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்து இரு நாடுகளும் அதில் தோல்வி அடைந்தன. இந்நிலையில்,  சீனா கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா எல்லைமீறி விட்டதாக கூறி அப்பகுதியில் ஏராளமான படைகளை குவித்து  இந்தியாவை மிரட்ட முயற்சித்து வருகிறது.  இதற்கிடையில்  காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதியான gilgit-baltistan பகுதியை சீனாவுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதுடன்,  அப்பகுதியில் சீன ராணுவத்தையும் அனுமதித்துள்ளது.  இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில்,  சீனா, பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் கைகோர்த்துக்கொண்டு இந்தியாவை எதிர்த்து வருகின்றன.  அதே நேரத்தில் நேபாளமும் இந்தியாவுக்குச் சொந்தமான சில பகுதிகளை தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடி வருகிறது.  இதன் மூலம் திட்டமிட்டு சீனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய மூன்று நாடுகளும் இந்தியாவை எதிர்க்கத் துணிந்துள்ளன.

அதை உறுதி செய்யும் வகையில்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவின் மீது  தன் ஆழ்மனதில் தேங்கி கிடக்கும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள அவர்,   இந்தியா தனது விரிவாக்க கொள்கையின் மூலம் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது,  வங்கதேசத்தை குடியுரிமைச் சட்டத்தின் வாயிலாகவும் , சீனா மற்றும் நேபாளத்துடன் எல்லை மோதல்களிலும் பிரச்சனை செய்து வருகிறது.  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் தாக்குவதாக இந்தியா பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ளார்.  அதேபோல் காஷ்மீரை சட்டவிரோதமாக  இந்தியா தன்னுடன் இணைத்திருப்பது ஒரு போர் குற்றம் என கூறியுள்ள அவர்,  நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கும், தெற்காசிய பிராந்திய அமைதிக்கும் இந்தியா அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார். 
 

click me!