சீனா உள்ள தைரியத்தில் இந்தியா மீது பாய்ந்து பிராண்டும் வெறிபிடித்த பாகிஸ்தான்..!! கொலைகார கூட்டணி.!!

By Ezhilarasan Babu  |  First Published May 26, 2020, 1:53 PM IST

எங்கள் எல்லைப் பகுதி ஒரு பலவீனமான பகுதி என யாரும் கருதிவிடக்கூடாது , பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எந்த வகையில் குரல் கொடுத்தாலும் அதற்கு பொருத்தமான பதிலடி வழங்கப்படுமென  எச்சரித்துள்ளார்.


காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை நீரு பூத்த நெருப்பாக இருந்து வரும் நிலையில் , பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளது.  gilgit-baltistan பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து கூறிவரும் நிலையில்,  பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரோஷி காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்திய அரசு ஏதாவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ,  பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் என மிரட்டியுள்ளார்.  அதே நேரத்தில் நாட்டின் ராணுவ தலைமை ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானுக்கு சவால்விடும் எந்த ஒரு முயற்சிக்கும் முழு ராணுவ பலத்துடன்  பாகிஸ்தான் பதிலளிக்கும் என கூறியுள்ளார். இது இந்தியாவை வம்பிழுக்கும் நடவடிக்கை என கருதப்படுகிறது. 

Latest Videos

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து,  இந்தியா மீது பாகிஸ்தான் கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறது,  சீனா உதவியுடன் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச  பிரச்சனையாக்க  முயன்று ,  அதை  ஐநா மன்றம் வரை கொண்டு சென்ற இருநாடுகளும் இறுதியில் அதில் தோல்வி அடைந்தன.  இதனால் இந்தியாவுடன் - சீனா பாகிஸ்தான் பகை  நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது.  அதன் வெளிப்பாடாக சீனா லடாக் மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இந்தியாவுடன் எல்லை பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறது ,  இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய திட்டமிட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவை சீண்டி சண்டை இழுக்கும் வேலையில் இறங்கியுள்ளது. அதாவது  இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதியான gilgit-baltistan பகுதிகளை சீனாவுக்கு தாரைவார்க்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. 

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு கில்கிட்- பால்டிஸ்தான் காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதி,  அப்பகுதி அனைத்தும் இந்தியாவிற்கு சொந்தமானது , அந்த இடத்தில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் செய்ய பாகிஸ்தானுக்கு உரிமையில்லை என இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.  இந்நிலையில் அதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஷா மெஹ்மூத் குரேஷி தனது இல்லமான முல்தானில் ஈத் தொழுகைக்குப் பின்னர், ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது பேசிய குரேஷி,  பாகிஸ்தான் எல்லையில் அமைதியை நிலைநாட்ட விரும்புகிறது,  ஆனால் எங்கள் எல்லைப் பகுதி ஒரு பலவீனமான பகுதி என யாரும் கருதிவிடக்கூடாது , பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எந்த வகையில் குரல் கொடுத்தாலும் அதற்கு பொருத்தமான பதிலடி வழங்கப்படுமென  எச்சரித்துள்ளார். காஷ்மீரில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிந்துகொள்ள ஐநா பொதுச்செயலாளர் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புகளை அணுகி உள்ளோம்,  இந்நிலையில் இந்தியா தன் உள்நாட்டு பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தானுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.  

அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் ஈத் கொண்டாடிய அந்நாட்டின் ராணுவ தலைமை ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா,  காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி அதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு சவால் செய்யும் எந்த ஒரு முயற்சிக்கும் முழு ராணுவ பலத்துடன்  பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்,   தெற்காசியாவின் ஸ்திரத்தன்மையை இந்தியா சேதப்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.  

 

click me!