தள்ளாடும் பாகிஸ்தான்... பொண்டாட்டி தாசனான இம்ரான்கான்..!! ரகசியத்தை போட்டுடைத்த பெண் எம்பி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 16, 2020, 10:53 AM IST
Highlights

நாட்டின் வெளியுறவு அமைச்சர்  ஷா மஹ்மூத் குரேஷிகூட அவரது வீட்டிற்குள்ளே செல்ல முடியாது. புஷ்ராவின் அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் இம்ரானை சந்திக்க முடியாது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி குறித்து ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் பெண் எம்.பி. உஜ்மா கர்தார்,ஒரு செய்தியாளரிடம் பேசிய தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அரசியல் தளத்தையே அது அதிர வைத்துள்ளது. காரணம், ராணுவத்தின் ஆதரவு இல்லாமல் எந்த அரசாங்கமும் பாகிஸ்தானில் இயங்க முடியாது என அவர் கூறியிருப்பதுதான் அது. அவரின் இந்த பேச்சு, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அரசியல் களத்தையும் சூடாக்கி உள்ளது. பாகிஸ்தான் என்றால்  பயங்கரவாதிகளின் புகலிடம் என்று அறியப்பட்டது போல அது பெயரளவிற்கு ஜனநாயக நாடு என்று சொல்லப்பட்டாலும் எப்போது வேண்டுமானாலும் ராணுவ ஆட்சி மலரலாம் என்ற சூழல் நிலவும்  ஜனநாயக நிலையற்ற தன்மை கொண்ட நாடாக அது இருந்து வருகிறது. 

பாகிஸ்தானுக்கு இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல என்றாலும், மீண்டும் இம்ரானிடமிருந்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றக்கூடும் என பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ஆளுங்கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் பெண் எம்.பி. உஜ்மா கர்தார் தனக்கு நெருங்கிய ஊடக நண்பரிடம் பேசிய தொலைபேசி உரையாடல் (ஆடியோ) ஒன்று வெளியாகி உள்ளது, அதில் அவர் பேசியிருப்பதாவது:- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்புபோல் இல்லை,  அவரது மூன்றாவது மனைவி புஷ்ராவின் முழு கட்டுப்பாட்டிலேயே இம்ரான் செயல்படுகிறார். புஷ்ரா வரைந்த கோட்டை இம்ரான்கான் தாண்டமாட்டார், இப்போதெல்லாம் அவரது வீட்டிற்கு யாரும் செல்ல முடியாது, அவரை சந்திக்கவே முடியாது, மொத்தத்தில் அவரது மனைவியிடம் கேட்காமல் அவர் எந்த முடிவையும் எடுப்பதில்லை. முதலில் நாங்கள் இம்ரான் வீட்டிற்கு மிக சௌகரியமாக சென்று வந்தோம், ஆனால் இப்போது அது கடினமாகி விட்டது.  நாட்டின் வெளியுறவு அமைச்சர்  ஷா மஹ்மூத் குரேஷிகூட அவரது வீட்டிற்குள்ளே செல்ல முடியாது. புஷ்ராவின் அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் இம்ரானை சந்திக்க முடியாது. 

புஷ்ரா இம்ரானை வீட்டிற்குள் ஒளித்து வைத்துக்கொள்கிறார்,  இம்ரனை எப்படி பணியவைக்க வேண்டுமென்பது புஷ்ராவுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இதை இம்ரான்கானே என்னிடம் கூறியிருக்கிறார், தன் மனைவி புஷ்ரா ஒரு மந்திரவாதிபோல் தன்னை அப்படியே கட்டுக்குள் வைப்பார் என அவர் என்னிடம் கூறியிருக்கிறார்,  ஒருகாலமும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என புஷ்ரா கூறியிருந்தாலும், இம்ரான்கானை அவர் இயக்குகிறார் என பேசும் அந்த பெண் எம்.பி அந்நாட்டு ராணுவத்திற்குள்ள செல்வாக்கையும் அந்த ஆடியோவில்  விவரிக்கிறார். அதில்,  அரசாங்கத்தின் பணிகளில் ராணுவம் தலையிடுகிறது என்றால் அதில் என்ன தவறு இருக்கிறது,  இது புதிய விஷயம் ஒன்றும் இல்லையே! எப்போதும் பாகிஸ்தானில்  இது நடப்பதுதானே, ராணுவத்தின் துணை இல்லாமல் ஒரு அரசாங்கம் எப்படி இயங்க முடியும், எனவே அதை நான் ஒருபோதும் தவறு என்று செல்லமாட்டேன் என தெரிவிக்கும் அவர், ராணுவம் இல்லாமல் நாட்டில் அரசாங்கம் இயங்க முடியாது எனவும் கூறியுள்ளார்.  தற்போது அவரின் ஆடியோ வெளியாகி பாகிஸ்தானில் சக்கைப்போடு போட்டுவருகிறது.

 

click me!