சீனாவுக்கு ஆதரவளித்த ஐரோப்பிய நாடுகள்..!! பயங்கர அதிர்ச்சியில் அமெரிக்கா..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 15, 2020, 4:41 PM IST
Highlights

ஆனால் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சீனாவே சிறப்பாக செயல்பட்டது என தெரிவித்துள்ளனர். குறிப்பாக தைவான், அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சீனாவை விட அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டதாக கூறியுள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டநாடு சீனாவா அல்லது அமெரிக்காவா என ஆய்வு நடத்தப்பட்டதில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவே சிறப்பாக செயல்பட்டதாக பதிலளித்துள்ளன. வெறும் மூன்று நாடுகள் மட்டும் சீனாவை விட அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டதாக கூறியுள்ளன. ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே கொரோனா விவகாரத்தில் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், தற்போது இந்த கருத்துக்கணிப்பு முடிவு அமெரிக்காவை மேலும் கோபப்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வுஹானில்  தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்  பரவியுள்ளது. கிட்டத்தட்ட 150க்கும் அதிகமான நாடுகள்  பாதிக்கப்பட்டுள்ளன, மற்ற நாடுகளை விட இந்த வைரஸால் அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 21 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் ஆய்வு நிறுவனமான டாலியா ரிசர்ச் மற்றும் முன்னாள் நேட்டோ பொதுச்செயலாளர் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்முசென் தலைமையிலான அலையன்ஸ் ஆஃப் டெமாக்ரசிஸ் பவுண்டேஷன் சுமார் 53க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 1,20,000 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியது, அதில் எந்தெந்த நாடுகள் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டன என்றும், எந்தெந்த நாடுகளில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் நிலைநாட்டப்படுகிறது  என்பது குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன, அதில் உலகெங்கிலும் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே covid-19 க்கு எதிரான போரில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டதாக கூறியுள்ளனர். 

ஆனால் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சீனாவே சிறப்பாக செயல்பட்டது என தெரிவித்துள்ளனர். குறிப்பாக தைவான், அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சீனாவை விட அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டதாக கூறியுள்ளனர். அது மட்டுமின்றி உலக அளவில் அதிபர் ட்ரம்பின் செல்வாக்கு குறைந்து வருவதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே அமெரிக்கா உலகளாவிய ஜனநாயகத்திற்கு சாதகமான சக்தி என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகப்படியான ஐரோப்பியர்கள், அமெரிக்கா ஜனநாயகத்துக்கு எதிர்மறையான சக்தி என கூறியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் உள்ள 15 நாடுகளில் பெரும்பாலானோர் அவ்வாறு தெரிவித்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் ஜெர்மனியர்கள் ஆவர், சுமார்  40% பேர் அமெரிக்கா ஜனநாயகத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.  இதில் அதிகப்படியாக  62 சதவீதம் சீனர்கள் அமெரிக்கா ஜனநாயகத்துக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

 

click me!