பாகிஸ்தான் விமானம் PK-306 கராச்சியிலிருந்து லாகூர் வந்தபோது, தரையிறங்கும் கியரில் ஒரு சக்கரம் காணாமல் போனது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, பயணிகள் இறங்கினர். விமானம் புறப்படும்போதே சக்கரம் பழுதடைந்திருந்ததா அல்லது பயணத்தில் காணாமல் போனதா என்று விசாரணை நடக்கிறது.
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் (PIA) உள்நாட்டு விமானம் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அதன் ஒரு சக்கரம் காணாமல் போயிருந்ததாக விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். வியாழக்கிழமை காலை தரையிறங்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு சக்கரம் இல்லாவிட்டாலும் PK-306 திட்டமிட்டபடி தரையிறங்கியது என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பயணிகள் வழக்கம்போல் இறங்கினார்கள். அப்போது கேப்டனின் வழக்கமான வாக்-அரவுண்ட் பரிசோதனையின்போது சக்கரம் காணாமல் போனது கவனிக்கப்பட்டது. விமானத்தின் முக்கிய தரையிறங்கும் கியரில் ஆறு சக்கரங்களில் ஒன்று காணாமல் போயிருந்தது.
கராச்சியிலிருந்து லாகூர் நோக்கிப் பயணித்த பி.ஐ.ஏ. விமானம் PK-306, லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பின்புற சக்கரம் காணாமல் போய்விட்டது. இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்; ராக்கெட் கிளம்பியாச்சு - வைரல் வீடியோ!
விமானம் சக்கரம் இல்லாமலே கராச்சியில் இருந்து புறப்பட்டதா அல்லது பயணிக்கும்போது சக்கரம் மாயமாகிவிட்டதா என்பதை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். "விமானம் புறப்பட்டபோது பின்புற சக்கரங்களில் ஒன்று பழுதடைந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது" என்றும் விமான நிறுவனத்தின் அதிகாரி கூறியுள்ளார்.
இதற்கிடையில், விமான நிறுவனத்தின் விமானப் பாதுகாப்பு மற்றும் லாகூர் விமான நிலையக் குழுக்கள் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், தங்கள் கண்டுபிடிப்புகளை முன்வைப்பதாகவும் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இனி இதுபோன்ற சூழ்நிலைகளில் பயணிகள் மற்றும் உபகரணங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விமானத்தின் வடிவமைப்பு இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். சக்கரம் திருடப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவதாக அவர் கூறியுள்ளார்.
கிரீன் கார்டு வைத்திருந்தாலும் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க முடியாது! இந்தியர்களுக்கு ஷாக்!