கிரீன் கார்டு வைத்திருந்தாலும் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க முடியாது! இந்தியர்களுக்கு ஷாக்!

கிரீன் கார்டு வைத்திருந்தாலும் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க முடியாது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

JD Vance says green card holders cannot permanently stay in usa ray

Green Card Holders Cannot Permanently stay in USA: அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை அந்த நாடு அதிரடியாக வெளியேற்றி வருகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் பல்வேறு கட்டமாக விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கை, கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டது பெரும் சர்ச்சையானது.

அமெரிக்காவில் வசிக்க கிரீன் கார்டு

Latest Videos

இது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டினருக்கு அமெரிக்கா அரசு கிரீன் கார்டு வழங்கி வருகிறது. இந்த கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருக்க முடியும். இதனால் இந்தியர்கள் கிரீன் கார்டு வாங்க போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில், கிரீன் கார்டு வைத்திருந்தாலும் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க முடியாது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பேச்சு 

இது தொடர்பாக ஒரு செய்தி நிறுவனத்திக்கு அளித்த பேட்டியில் பேசிய ஜே.டி. வான்ஸ், ''ஒரு கிரீன் கார்டு வைத்திருப்பவருக்கு அமெரிக்காவில் தங்குவதற்கு காலவரையற்ற உரிமை இல்லை. இது அடிப்படையில் பேச்சு சுதந்திரத்தைப் பற்றியது அல்ல. ஆம், இது தேசிய பாதுகாப்பைப் பற்றியது. ஆனால் மிக முக்கியமாக, நமது தேசிய சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க யார் தகுதியானவர்கள் என்பது குறித்து அமெரிக்கர்களாகிய நாம் முடிவெடுப்பது பற்றியது'' என்றார்.

மோடி, ட்ரம்ப்-க்கு நன்றி சொன்ன புடின்; உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு காரணமே நீங்க தான்!

கிரீன் கார்டுகளை அமெரிக்க அரசு ரத்து செய்ய முடியுமா?

தொடர்ந்து பேசிய ஜே.டி. வான்ஸ், ''வெளியுறவுத்துறை செயலாளரும், அமெரிக்க அதிபரும் ஒரு நபர் அமெரிக்காவில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தால், அவர்களுக்கு இங்கு இருக்க சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றால், அவ்வளவுதான்'' என்று தெரிவித்தார் அமெரிக்கா சட்டப்படி குற்றச் செயல்கள் செய்பவர்கள், நீண்டகாலமாக நாட்டிலிருந்து விலகி இருப்பவர்கள் அல்லது குடியேற்ற விதிகளை பின்பற்றாதது உள்ளிட்ட சில சூழ்நிலைகளில் கிரீன் கார்டுகளை ரத்து செய்ய அமெரிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

கோல்டன் விசாவை கொண்டு வந்த டிரம்ப் 

அமெரிக்காவில் தங்கியிருக்க கிரீன் கார்டுகளே இந்தியர்களுக்கு முக்கியமானதாக இருக்கும் நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் அறிவிப்பு லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாக அமைந்துள்ளது. ஏற்கெனவே டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் கோல்டன் விசா திட்டத்தை கொண்டு வந்தார். அதாவது 5 மில்லின் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.42 கோடி) அளிப்பவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும். இந்த விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமிக்கு வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்; ராக்கெட் கிளம்பியாச்சு - வைரல் வீடியோ!

click me!