பாகிஸ்தானில் பயங்கரம்... குடியிருப்பு பகுதிகளில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து... 100 பேர் உயிரிழப்பு..?

Published : May 22, 2020, 04:32 PM ISTUpdated : May 22, 2020, 04:36 PM IST
பாகிஸ்தானில் பயங்கரம்... குடியிருப்பு பகுதிகளில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து... 100 பேர் உயிரிழப்பு..?

சுருக்கம்

லாகூரிலிருந்து கராச்சி நோக்கி 100 பேருடன் சென்றுக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 100 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி நோக்கிச் சென்ற ஏர்பஸ்-320 ரக விமானத்தில் 90க்குட் மேற்பட்ட பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கியது. இதனையடுத்து, அந்த பகுதி முழுவதும் கரும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து உள்ளனர். இந்த சம்பவத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. குடியிருப்பில் விழுந்ததால் அங்கிருந்த மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

2 விநாடிகளில் 700 கிமீ வேகம்.. உலகின் அதிவேக ரயில்.. சீன மேக்லெவ் 700 கிமீ சாதனை
இரவு நேரத்தில் நிலநடுக்கம்.. அலறியடித்து வெளியே ஓடிய மக்கள்.. நடுங்கிய தைவான்.. என்ன ஆச்சு?