இந்தியாவை பற்றி பேச பாகிஸ்தானுக்கு தகுதியில்லை..!! நேருக்கு நேர் பதிலடி கொடுத்த பெண் எம்.பி

By Ezhilarasan Babu  |  First Published Sep 29, 2019, 5:03 PM IST

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில்  சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில்  இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி நடக்கிறது என்றார்.


உகாண்டாவில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டின்போது, காஷ்மீரில் இந்தியா தன் ராணுவத்தை குவித்துவைத்துள்ளது என்ற பாகிஸ்தானில் குற்றச்சாட்டுக்கு, பாகிஸ்தான் ஒரு இராணுவ சர்வாதிகார நாடு என  இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

Latest Videos

உகாண்டா நாட்டில்  64-வது காமன்வெல்த் சபாநாயகர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது, அதில் காமன் வெல்த் உறுப்பு நாடுகளின் சபாநாயகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில்  வொவ்வொரு நாட்டின் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டம் மற்றும் புதிய மசோதாக்கள் குறித்து விரிவான கலந்தூரையாடல்கள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில்   சபாநாயகர் ஒம் பிர்லா தலைமையில் எம்பிகள், ரூபா கங்குலி , அனுமந்தையா, இன்னும் சில அதிகாரிகள் குழு கலந்துகொண்டுள்ளனர்.

 

அப்போது அந்த கூட்டத்தில்  பேசிய பாகிஸ்தான் தரப்பினர் பிரதிநிதிகள்,  காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின்னர் அங்கு காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றனர் , அளவுக்கு அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்  மூலம் காஷ்மீர்  மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது எனவும் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினர். 

பின்னர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய,  எம்பி ரூபா கங்குலி,  பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கும் நாடு, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பயங்கரவாத நாடு என்றார். அதற்கு  இந்தியாவை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்ற அவர்.  தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில்  சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில்  இராணுவ கட்டுப்பாட்டின் கீழ்  ஆட்சி நடக்கிறது என்றார். இத்துடன்  பாகிஸ்தான் தன்னுடைய பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அப்போது அவர் எச்சரித்ததுடன்,பாகிஸ்தானுக்கு  பதிலடி கொடுத்தார் 

click me!