சீனாவில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் மோசமான சாலை விபத்துக்கள் சர்வசாதாரணமாக விபத்துகள் நடைபெறுகிறது. அங்கு போக்குவரத்து விதிமுறைகள் பெரும்பாலும் மீறப்படுவதுடன், பல விதிமுறைகள் செயல்படுத்தப்படாததால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சீனா நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணத்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்துன் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர, எதிரே வந்த லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக மீட்டு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.