மோடி வரும் போது... இருக்கையை விட்டு எழுந்த இம்ரான்கான்..! ஒரே நேரத்தில் டக்குன்னு எழுந்து நின்ற உலக தலைவர்கள்...!

By ezhil mozhi  |  First Published Sep 26, 2019, 6:38 PM IST

ஜெனிவாவில் நடைப்பெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் போதும் மோடிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


மோடி வரும் போது... இருக்கையை விட்டு எழுந்த இம்ரான்கான்..! ஒரே நேரத்தில் டக்குன்னு எழுந்து நின்ற உலக தலைவர்கள்...! 

ஐநா சபை பொதுக்கூட்டம் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் இந்தியர்கள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கடந்த 20ஆம் தேதி அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி.

Latest Videos

22 ஆம் தேதி அமெரிக்க இந்தியர்கள் நடத்திய மாநாட்டில் அதிபர் டிரம்ப் உடன் ஒரே மேடையில் தோன்றினார் மோடி. அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது வர்த்தக உறவுகள், இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை, உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி பேசப்பட்டது.

இந்நிலையில் 27ஆம் தேதியான நாளை ஐநா சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார். பிரதமர் மோடியின் நியூயார்க் பயணத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய கூட்டங்களில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியும் பல்வேறு நிறுவன தலைவர்களை சந்தித்தும் பேசி வருகிறார். போகும் இடம் எல்லாம் அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்தியாவில் ஸ்வச் பாரத் திட்டத்தை (தூய்மை ஐந்தியா) திறம்பட செயல்படுத்தியதற்காக பில்கேட்ஸ் கொடுத்தவருக்கு உயரிய விருது வழங்கப்பட்டது

ஜெனிவாவில் நடைப்பெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் போதும் மோடிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பாலகோட் தாக்குதல் முதல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரை .. ஒருவிதமான பனிப்போர் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வருகிறது. காஸ்மீர் குறித்த இந்தியாவின் முடிவுக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து ட் ரம்புடன் மோடி நடத்திய பேச்சுவார்த்தையின் போதும், காஸ்மீர் விவகாரம் பற்றி இருநாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ளும் என தீர்க்கமாக சொல்லி இருந்தார் மோடி.

இப்படியான நிலையில், வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா உள்ளது போலவே.... மிகுந்த வலிமை மிக்க தலைவர்கள் பட்டியலில் அடுத்தடுத்து முன்னேறி வருகிறார் மோடி.

இந்த  நிலையில், ஒரு கான்பரன்ஸ் ஹாலில் மோடி உள்ளே நுழையும போது, உலக தலைவர்கள்  எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பு கொடுக்க, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று  ஓரமாக அமர்ந்து மெதுவாக எழுவது போன்று உள்ள புகைப்படத்தை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!