சாத்தானே என்னை உடலுறவு கொள்ள தூண்டினான்... சிறுமையை சீரழித்த பாதிரியாரின் பகீர் காரணம்..!

By Thiraviaraj RM  |  First Published Sep 26, 2019, 3:13 PM IST

அந்த பெண்ணின் உடலில் குடிகொண்டிருக்கும் சாத்தானே என்னை பாலியல் ரீதியாகத் தூண்டினான்" என வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  


அந்த இளம் பெண்ணிற்குள் குடிகொண்டு இருந்த சாத்தானே என்னை உடலுறவு கொள்ள தூண்டியதாக பாதிரியார் காரணம் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவை சேர்ந்த மேரிலாந்து நகரில் உள்ள கெய்தஸ்பர்க் பகுதியை சேர்ந்த  பெந்தேகோஸ்தே பிரிவு தேவாலயத்தில் பணியாற்றி வருபவர் 42 வயதான ஆக்டேவியோ காண்டரிரோ.  இவர் கடந்த ஜனவரி மாதம் சுமார் 4 மாத காலமாக ஒரு பெண் சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

Latest Videos

அங்கிருந்து வெளியேறிய அந்த சிறுமி இதுகுறித்து, ’’சிறு வயதில் தனியாக இருக்க கூடாது எனக்கூறினார். தேவாலயத்தின் உள்ளேயே ஒரு சிறிய அறை ஒதுக்கி தந்தார். என்னை தனியேவிட மனமில்லை எனக் கூறி அந்த என்னுடனேயே இருந்தார். என்னை மிரட்டி பாலியல் தொல்லைகள் செய்தார். வெளியில் சொல்லாமல் இருக்க ஆடைகள், வசதிகள், பள்ளி செல்வதற்கான உதவிகள் செய்து தருவதாக கூறினார். என்னால் அவரது பாலியல் தொந்தரவுகளை பொறுத்துக் கொள்ள இயலவில்லை என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இந்தப் புகாரின் அடிப்படையில் பாதிரியாரை கைது செய்தனர். விசாரணையில், ‘’அந்த பெண்ணின் உடலில் குடிகொண்டிருக்கும் சாத்தனே என்னை பாலியல் ரீதியாகத் தூண்டினான்" என வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனிடையே, ஆக்டேவியோ காண்டரிரோவினால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் தங்களை அணுகி புகார் கொடுக்கலாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். 
 

click me!