இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்துவதால் 'பத்மாவத்' படத்துக்கு தடை!

Asianet News Tamil  
Published : Jan 30, 2018, 02:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்துவதால் 'பத்மாவத்' படத்துக்கு தடை!

சுருக்கம்

Padmavath film in Malaysia is banned

பத்மாவத் திரைப்படம் காட்சிகள் எதுவும் வெட்டப்படாத நிலையில் பாகிஸ்தானில் திரையிடப்படும் நிலையில், மலேசியாவில் பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உருவாக்கத்தில் பத்மாவதி திரைப்படம் உருவாக்கப்பட்ட கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.க, ராஜ்புத் கார்னி சேனா, ராஜ்புத் சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பத்மாவதி திரைப்படம் பத்மாவத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கடந்த 25 ஆம் தேதி இந்தியா முழுக்க ரிலீஸ் செய்யப்பட்டது. ராஜஸ்தான், அரியனா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் பத்மாவத் திரைப்படம் வெளியிடப்படவில்லை. பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினர் தெய்வமாக வழிபடும் சித்தூர் ராணி பத்மினி கதாபாத்திரத்தில், தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். வாள் சண்டை, குதிரை சவாரி என பயிற்சிகள் எடுத்து இதில் நடித்துள்ளார்.

சரித்திர கால ஆடைகள், ஆபரணங்கள் அணிந்து ராணியாகவே மாறி இருந்தார். படம் பார்த்தவர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். ஆனால், ராஜபுத்திர வம்சத்தை சேர்நத்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், தீபிகா படுகோனே போலீஸ் பாதுகாப்புடன் வெளியே சென்று வருகிறார். படம் வெளியான பிறகும் தீபிகா படுகோனேவுக்கு மிரட்டல்கள் விடப்பட்டு வருகின்றன. அதேபோல் பத்மாவத் தணிக்கை சான்றிதழ் அனுமதி அளித்த சென்சார்போர்டு தலைவர் பிரசான் ஜோஷிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பத்மாவத் படம் திரையிடப்பட்டு 4 நாட்களில்
100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் பத்மாவத் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மலேசியாவில் பத்மாவத்
திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மலேசிய சென்சார்போர்டு தலைவர் முகமத் சாம்பிரி அபதுல் அஜீஸ் கூறும்போது, பத்மாவத் திரைப்படம் முஸ்லீம்களின் உணர்வை புண்படுத்துவதாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக மலேசியாவில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மலேசியா சென்சார்போர்டு தடையை மீறி, விநியோகஸ்தர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். காட்சிகள் எதுவும் வெட்டப்படாமல், பத்மாவத் திரைப்படம் பாகிஸ்தானில் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பலூசிஸ்தானை பாகிஸ்தானிடம் இருந்து உடைத்த இந்தியா..! தப்பிக்க அசீம் முனீரின் மிருக்கத்தன உத்தி..!
இந்தியாவுல இல்லப்பா.. துபாய்ல இருக்கேன்! ஓஸ்மான் ஹாதி கொலைக் குற்றவாளி வெளியிட்ட வீடியோவால் போலீஸ் அதிர்ச்சி!