Omicron : சமூக பரவலானது ஒமைக்ரான்… இங்கிலாந்த் சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

By Narendran S  |  First Published Dec 7, 2021, 6:43 PM IST

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாகத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். 


இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாகத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல், இந்தியா, இங்கிலாந்த் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியது. இதை அடுத்து அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாகத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த ஞாயிறு வரை 90 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 336 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித், வெளிநாடு செல்லாத பிரிட்டன் மக்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொது இடங்களில் செல்வோருக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் பிரிட்டன் வருவோர் 10 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 350 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த 10 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும் சஜித் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஓமைக்ரானை கவலைக்குறியதாக அறிவித்துள்ள உலக சுகாதார மையம், அதன் பரவல் வேகமும் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.  ஒமைக்ரான் முதலில் கண்டறியப்பட்ட பல்கலைகழக மாணவர்களுக்கு மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதால், அறிகுறிகள் லேசானதாக இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளது. ஒமைக்ரான் திரிபால் வயதானவர்கள் பாதிக்கப்படும் போது அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

click me!