அதில் குர்ஆன் வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதை பிரியந்த குமார கிழித்து குப்பைத் தொட்டியில் வீசினார் எனவும் கூறப்படுகிறது. இதை அறிந்த சிலர் மற்ற தொழிலாளிகளிடம் இத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு கூட்டமாக திரண்டு சுவரொட்டியை கிழித்த பிரியந்த குமாராவை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை சித்திரவதை செய்து சாலையில் வைத்து கொடூரமாக முறையில் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினர்.
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் போஸ்டரை கிழித்தார் என்பதற்காக இலங்கை தொழிலாளியை நடுரோட்டில் வைத்து பாகிஸ்தானியர்கள் உயிரோடு தீவைத்து எரித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள நிலையில் ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.
பாகிஸ்தான் என்பது ஒட்டுமொத்த தீவிரவாதிகளின் கேந்திரமாக இருந்து வருகிறது, அது பயங்கரவாதத்தின் கோட்டை என இந்தியா தொடர்ந்து அந்நாட்டை விமர்சித்து வருகிறது. அதே போல் அடிக்கடி இந்திய எல்லைக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடும் முயற்சியில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதை கண் கொத்தி பாம்பாக இருந்து இந்தியா அதை முறியடித்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதத்தின் கோட்டையாக இருப்பதை உலகம் அறிந்தும், அதை கண்டும் காணாமலும் இருந்து வருகிறது. உலகத்தின் முக்கிய பயங்கரவாதிகள் பாகிஸ்தானுடன் தொடர்பை வைத்துக் கொண்டுள்ளனர். பல பயங்கரவாத அமைப்புகள் இன்னும் அச்சமின்றி அங்கு செயல்படுகின்றன, ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு எதிரான திட்டங்கள் அங்குதான் தீட்டப்படுகிறது.
ஜமாத்-உத்-தாவா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இவை தவிர பல பயங்கரவாத அமைப்புகளும் அங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த தகவலை இந்தியா பலமுறை ஐநா மன்றத்திலேயே கூறியுள்ளது. எனவே பயங்கரவாத அமைப்புகளை கண்காணிப்பது மற்றும் அவர்களுக்கு வரும் நிதி உதவிகளை நிறுத்துவது குறித்தும் பல முறை இந்தியா தரப்பில் ஐநா மன்றத்தில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மிகவும் பழமை வாதம், பெண்ணடிமை தனம், மத வெறுப்பு தலை விரித்து ஆடுவதை அங்கு நடக்கும் நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பல வெளிநாட்டு பயணிகளுக்கு கூட அந்நாட்டிற்கு வர தயங்குவதற்கு இது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எந்த நேரத்திலும் அங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம், அந்நாட்டிற்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற மனநிலை சர்வதேச நாடுகளின் மத்தியில் உள்ளது. பல நாடுகள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட செல்லவும் தயக்கம் காட்டி வருவதற்கும் இதுவே காரணமாக இருந்து வருகிறது.
அதேபோல் அங்குள்ள அரசியல் கட்சிகளும் முழுக்க முழுக்க மத தூய்மைவாதம், மத வெறுப்பு பிரச்சாரம் போன்றவற்றையே மக்கள் மத்தியிலும் கட்டமைத்து வருகின்றன. இதன் வெளிப்பாடாக ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைக்கும்வகையிலான சம்பவம் ஒன்று அந்நாட்டில் அரங்கேறியுள்ளது. ஒரு அரசியல் கட்சியை சார்ந்த சுவரொட்டியை கிழித்தார் என்பதற்காக இலங்கைத் தொழிலாளி ஒருவரை சக தொழிலாளிகள் தீ வைத்து எரித்து கொன்றுள்ள சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் பிரியந்தா குமாரா (40) இவர் பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் சியால்கோட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சியால் கோட்டில் அவரது தொழிற்சாலைக்கு வெளியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு அரசியல் கட்சியின் போஸ்டரை அவர் கிழித்ததாக கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தானில் இயங்கி வரும் கட்சியான தெஹ்ரீக்-இ-லப்பைக் என்ற கட்சி ஒன்று இயங்கி வருகிறது. அது வலதுசாரி சித்தார்த்தை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் பிரியந்த குமாரா அந்தக் காட்சியின் போஸ்டரை கிழித்ததாக கூறப்படுகிறது.
அதில் குர்ஆன் வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதை பிரியந்த குமார கிழித்து குப்பைத் தொட்டியில் வீசினார் எனவும் கூறப்படுகிறது. இதை அறிந்த சிலர் மற்ற தொழிலாளிகளிடம் இத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் ஒரு கூட்டமாக திரண்டு சுவரொட்டியை கிழித்த பிரியந்த குமாராவை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை சித்திரவதை செய்து சாலையில் வைத்து கொடூரமாக முறையில் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தினர். அப்போது அவர் தீயில் கருகி அலறினார். அப்போது அவரை சுற்றி நின்று அவர்கள் ஆரவாரமாக கோஷமிட்டு அதை கொண்டாடினார். சிலர் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த பஞ்சாப் மாகாண போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளியை எரித்த 50 பேரை கைது செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் சியால் கோட்டில் கொடூரமான முறையில் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த நாள் பாகிஸ்தானுக்கு ஒரு அவமானகரமான நாள். இந்த விசாரணையை நான் மேற்பார்வையிட்டு வருகிறேன். இந்த கொடூரத்திற்கு காரணமான அனைவரும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர் என கூறியுள்ளார். பாகிஸ்தானில் நடந்த இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.