மருத்துவமனை வளாகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 4 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்..!

By vinoth kumar  |  First Published Jun 2, 2022, 7:56 AM IST

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. பள்ளி, சூப்பர் மார்கெட், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில், அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. பள்ளி, சூப்பர் மார்கெட், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில், அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

Latest Videos

undefined

இந்நிலையில், அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் உள்ள துல்சா மருத்துவமனை வளாகத்தில் புகுந்த நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்தனர். இந்த துபாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதில், மேலும், சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் டெக்சாஸில் உள்ள  ஒரு தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!