பழிவாங்கத் துடிக்கும் இஸ்ரேல் ராணுவம்! ஹமாஸ் தலைவர் டெய்ஃப்பை சுற்றி வளைத்து வான்வழித் தாக்குதல்!

Published : Jul 13, 2024, 07:29 PM ISTUpdated : Jul 13, 2024, 07:39 PM IST
பழிவாங்கத் துடிக்கும் இஸ்ரேல் ராணுவம்! ஹமாஸ் தலைவர் டெய்ஃப்பை சுற்றி வளைத்து வான்வழித் தாக்குதல்!

சுருக்கம்

ஹமாஸின் ராணுவப் பிரிவு தளபதியும், இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடத்தபட்ட கொடூரத் தாக்குதலுக்கு மூளையாகக் செயல்பட்டவருமான முகமது டெய்ஃப் மற்றும் கான் யூனிஸ் படைப்பிரிவின் தளபதி சலாமே ஆகியோரைக் குறிவைத்து இஸ்ரேல் இந்தத் ராணுவ நடவடிக்கையை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சனிக்கிழமையன்று தெற்கு காசா பகுதியில் ஒரு முக்கியமான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இரண்டு மூத்த ஹமாஸ் தலைவர்களான முகமது டெய்ஃப் மற்றும் ரஃபா சலாமே ஆகியோரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹமாஸின் ராணுவப் பிரிவு தளபதியும், இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடத்தபட்ட கொடூரத் தாக்குதலுக்கு மூளையாகக் செயல்பட்டவருமான முகமது டெய்ஃப் மற்றும் கான் யூனிஸ் படைப்பிரிவின் தளபதி சலாமே ஆகியோரைக் குறிவைத்து இஸ்ரேல் இந்தத் ராணுவ நடவடிக்கையை நடத்தியுள்ளது.

இவரும் அல்-மவாசி மற்றும் கான் யூனிஸுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு சுரங்கக் கட்டிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காசா சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்தனர். இருப்பினும், கொல்லப்பட்டவர்களில் டெய்ஃப் இருந்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

அம்பானி வீட்டுத் திருமணத்தில் எல்லார் கண்ணும் இஷா அம்பானியின் நெக்லஸ் மேலதான்... என்ன விசேஷம் தெரியுமா?

பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாலஸ்தீனியர்கள் கூடாரம் அமைத்துள்ள முகாமுக்குள் தாக்குதல் நடத்தவில்லை என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. தாக்குதல் நடந்தபோது பல ஹமாஸ் செயற்பாட்டாளர்களும் அப்பகுதியில் இருந்துள்ளனர்.

அல்-மவாசி மற்றும் மேற்கு கான் யூனிஸை உள்ளடக்கிய போர் நிறுத்த மண்டலத்திற்கு அருகில் உள்ள இடத்தில் நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல் ஹமாஸ் குழுவினரைக் குறியாக வைத்து துல்லியமாக செயல்படுத்தப்பட்டது என இஸ்ரேல் தரப்பு கூறுகிறது.

தாக்குதலின்போது அந்த இடத்தில் இஸ்ரேலிய பணயக் கைதிகள் யாரும் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. டெய்ஃப் மற்றும் சலாமே இருவரும் கொல்லப்பட்டார்களா என உளவுத்துறையிடம் இருந்து உறுதியான தகவல் கிடைக்க இஸ்ரேல் ராணுவம் காத்திருக்கிறது.

இந்த அதிசயத்த பாருங்களேன்... காற்றைக் கடைந்து வெண்ணெய் எடுத்த ஸ்டார்ட்அப் நிறுவனம்! பில் கேட்ஸ் செய்த மேஜிக்!

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!