கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காணச் சென்ற சுற்றுலா பயணிகளின் நீழ்ழுழ்கி கப்பல் மாயமான நிலையில், அதில் இன்னும் 5 மணி நேரம் மட்டுமே ஆக்ஸிஜன் இருப்பு இருக்கும் நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக, 21அடி கொண்ட நீர் மூழ்கி கப்பல் ஒன்று 5 சுற்றுலா பயணிகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டிக் கடலில் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட 2 மணி நேரத்தில், நீர் மூழ்கி கப்பல் தனது சிக்னலை இழந்தது. நீர் முழ்கி கப்பலில் பயணித்த பயணிகளின் நிலைமை இப்போது வரை தெரியவில்லை. மாயமானவர்களை மீட்கும் பணியில் கனடா - அமெரிக்கா கடற்படைகள் இறங்கியுள்ளன.
நீர்மூழ்கி கப்பலை தேடும் முயற்சியில் C-130 விமானம் மூலம் தொடர்ந்து வருகிறது. மீட்புக் குழுவினரின் தகவல்படி, நீர்மூழ்கிக் கப்பலில் விமானி உட்பட ஐந்து பேரை ஏற்றிச் செல்ல முடியும். மேலும் 70 முதல் 96 மணி நேரம் ஆக்ஸிஜன் வசதி இருக்கும் நிலையில் தற்போதைய நிலவரப்படி இன்னும் 5 மணி நேரத்திற்கும் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது.
21 அடி கொண்ட இந்தக் கப்பலில் நான்கு நாட்கள் அவசர காலத் திறன் உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் OceanGate Expeditions நிறுவனத்தைச் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.