ஒபாமா மனைவி செஞ்சா தப்பாம்; அதையே டிரம்ப் மனைவி செஞ்சா ரைட்டாம்…

Asianet News Tamil  
Published : May 20, 2017, 09:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
ஒபாமா மனைவி செஞ்சா தப்பாம்; அதையே டிரம்ப் மனைவி செஞ்சா ரைட்டாம்…

சுருக்கம்

Obamas wife Shencha thampam Thats the same Trumps wife Sejana Wright ...

இரண்டு வருடங்களுக்கு முன்பு சௌதி அரேபியாவுக்கு ஒபாமா மற்றும் அவரது மனைவி சென்றநர். அப்போது அரசர் கொடுத்த தலையை மறைக்கும் துணியை போட மறுத்துவிட்டார் ஒபாமா மனைவி. அதை கடுமையாக விமர்சித்த டிரம்ப். தற்போது டிரம்ப் மனைவியும் அதையே செய்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் வெளிநாட்டுப் பயணம் ரியாத்திலிருந்து தொடங்கியுள்ளது.

அதிபர் டிரம்பின் 8 நாள் பயணத்தில் இஸ்ரேல், பாலத்தீன பிராந்தியங்கள், பிரஸ்ஸல்ஸ், வத்திக்கான் மற்றும் சிஸிலி ஆகிய இடங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா - செளதி அரேபியா இடையே இன்று பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

செளதி தலைநகரில் மன்னர் சல்மான், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை வரவேற்றார். சம்பளமின்றி வெள்ளை மாளிகையில் ஆலோசகராக பணியாற்றும் டிரம்பின் மகள் இவான்கா இந்த பயணத்தில் டிரம்புடன் வருகை புரிந்துள்ளார். மேலும், டிரம்பின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகிக்கும் இவான்காவின் கணவரான ஜேரட் குஷ்னரும் இந்த பயணத்தில் இடம்பெற்றுள்ளார்.

செளதி அரேபியாவுக்கு வந்த மெலனியாவும், இவான்காவும் தலையை மறைக்கும் துணியை அணிய மறுத்திவிட்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல ஒபாமாவின் மனைவி மிசைல் முக்காடுக்கு மறுத்தபோது, சௌதியை அவமானப்படுத்திவிட்டார்கள் என்ற டிரெம்ப் கூவியது நினைவுக்குரியது.

இப்போ டிரம்பின் மனைவியும் இதையே செய்தபோது டிரம்ப் அமைதி காப்பது தலைமை ஏற்ற பின்பு பழைய நிலையை மறந்துவிட்டார் என்பதை நினைவுறுத்துகிறார்.

PREV
click me!

Recommended Stories

லண்டனில் KFC இனவெறி வழக்கு.. இந்திய ஊழியருக்கு ரூ.81 லட்சம் இழப்பீடு
உலகில் முதல்முறை! சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரித்த இஸ்ரேல்.. கொதிக்கும் அரபு நாடுகள்!