
அமெரிக்காவின் என்.எஸ்.ஏ, உருவாக்கிய, இணையவழி தாக்குதல்களை நடத்துகிற ஆற்றல் வாய்ந்த டூல்களை கொண்டு, இந்தியா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ஊடுருவி ‘வான்னா கிரை’ என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இ-மெயில் மூலம் பரவுவதாகக் கூறப்படும் இந்த வைரஸ், உலகமெங்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்பியூட்டர்களை தாக்கியுள்ளது.
இந்த வைரஸ்சின் புதிய பதிப்புகளைக் கொண்டு ‘ஹேக்கர்கள்’ தாக்குதல்கள் நடத்தாமல் தடுக்க உலகளாவிய அதிகார வர்க்கத்தினர் போராடி வருகின்றனர். ரான்சம் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ரஷ்யா நாடும் அதற்கு விதி விலக்கல்ல.
இந்த நிலையில், ராம்சன்வைரஸ்களில் இருந்து கம்யூட்டர்களை காக்க ஒரு விசித்திர முயற்சியினை ரஷ்யா நாட்டின் பாதுகாப்புதுறை செய்துள்ளது.
ரஷ்ய நாட்டின் பாதுகாப்புதுறைக்கு முக்கியமான தகவல்களை தரும் தொழில்நுட்ப பிரிவில் உள்ள கம்யூட்டர்களில் வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக பாதிரியார்களை அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து கணிகளில் வைரஸ் தாக்கமல் இருக்க கம்யூட்டர்கள் மீது புனிதநீரும் தெளித்த சம்பவம் நடந்தது.