அட கடவுளே... இப்படித்தான் இந்த உலகம் அழியுமா...?? கொரோனா பீதியில் நடுங்கும் 30 நாடுகள்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 31, 2020, 12:10 PM IST
Highlights

அதேபோல லண்டன் , நியூயார்க் , மற்றும் சிட்னி ,  ஆகிய நாடுகளும்  இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன . இந் நிலையில் சீனாவில் சுமார்  7711 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இந்தியா உள்பட 30 நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இந்நிலையில்  சர்வதேச சுகாதார அமைப்பு  அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது அதாவது இந்த உலகம் மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை இதுவாகும் ,  சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் சீனாவெங்கும் பரவி சீன மக்களை கபளீகரம் செய்து வருகிறது .  வைரஸ் தாக்கத்தால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் மயங்கி விழுந்து இறக்கும் சோகம் சீன வீதிகளில் காணமுடிகிறது சார்ஸ் வைரஸை போல இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதால் சர்வதேச ஆபத்தாக இந்த கொரோனா மாறியுள்ளது .  இது  சீனாவிலிருந்து வேகமாக பரவுவதால் சீனாவுடனான விமானப் போக்குவரத்தை  சர்வதேச நாடுகள் துண்டித்துள்ளன . 

இதனால் சீனாவில் முற்றிலுமாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.  இந்த வைரஸ் பரவுவதற்கு அதிக ஆபத்து இருக்கும் முதல் 30 நாடுகளின் பட்டியல் ஒன்றை இங்கிலாந்து பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்,  அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளன .சீனாவுக்கு அடுத்து மிகத்தீவிரமாக நோய் பரவக்கூடிய அபாயம்  உள்ள நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது,   அதற்கு அடுத்த இடத்தில் ஜப்பான் , ஹாங்காங் உள்ளன .  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்தொற்று அபாயத்தில்,  அமெரிக்கா ஆறாவது இடத்திலும் ,  ஆஸ்திரேலியா 10-வது  இடத்திலும் ,  இங்கிலாந்து 17வது இடத்திலும் ,  இந்தியா 23 வது இடத்திலும் உள்ளன . பாங்காங்  வைரஸ் பாதிப்பில் தீவிர நகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது . 

அதேபோல லண்டன் , நியூயார்க் , மற்றும் சிட்னி ,  ஆகிய நாடுகளும்  இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன . இந் நிலையில் சீனாவில் சுமார்  7711 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .   இந்நிலையில் சுமார் 213 பேர் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது .  இந்நிலையில்  உலக சுகாதார அமைப்பின் அவசர குழு குடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது,   அதாவது உலகம் அவசர நிலையில் இருக்கிறது எனவும் எச்சரித்துள்ளது.  அதேபோல் சார்ஸ் நோய் கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டில் ஷாங்காயில் இருந்து உலகம் முழுவதும் பரவியது அதில் சுமார் 8402 பேர் பாதிக்கப்பட்டு 916 பேர் உயிரிழந்தனர் என உலக  சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
 

click me!