சீனாவை சின்னபின்னமாக்கும் கொரோனா வைரஸ்.... கொத்து கொத்தாக மடியும் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Jan 31, 2020, 11:45 AM IST
Highlights

சீனாவின் ஹூபெய் மகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் பெரும் பீதி அடைந்துள்ளனர். வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் 132 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று, மேலும் 81 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 213-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 213-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் அறிகுறியுடன் 9,692 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

சீனாவின் ஹூபெய் மகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் பெரும் பீதி அடைந்துள்ளனர். வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் 132 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று, மேலும் 81 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 213-ஆக அதிகரித்துள்ளது.

நோய் அறிகுறியுடன் 9,692 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிடுறது. இது தொடர்பாக அதிபர் ஜீ ஜிங்பிங் கூறுகையில், கொரோனா வைரஸ் என்னும் “பேய்” கட்டுப்படுத்தப்படும். வைரஸ் குறித்த தகவல்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் மற்றும் அரசு வெளிப்படை தன்மையும் நடக்கும் என்றார். இதுவரை காய்ச்சலில் இருந்து மீண்ட 124 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!