
வடக்கு மக்கெடோனியாவில் உள்ள கிளப் பல்ஸில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதிகாலையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த அவசர உதவி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, வடக்கு மக்கெடோனியாவின் கோகானியில் உள்ள கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தலைநகர் ஸ்கோப்ஜேவிலிருந்து சுமார் 100 கி.மீ கிழக்கே அமைந்துள்ள இந்த இரவு நேர விடுதியில் சுமார் 1,500 பேர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கனடாவின் புதிய அமைச்சரவையில் 2 இந்திய வம்சாவளி பெண்கள்!
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில் கட்டிடம் தீப்பிடித்து எரிவதும், கரும்புகை சூழ்ந்திருப்பதும் தெரிகிறது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணி அளவில் (02:00 GMT) ஏடிஎன் என்ற பிரபலமான ஹிப்-ஹாப் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இசை நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேடையில் இருந்து வந்த தீப்பொறிகள் கூரையில் பட்டு தீ வேகமாக பரவியது வீடியோவில் பதிவாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அவசர உதவி குழுவினர் உயிர் பிழைத்தவர்களை மீட்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையை நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர். பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? பிரதமர் மோடி விளக்கம்